சினிமா செய்தி: தலைவி படத்திற்காக தனது உடல் எடையை கூட்டிய கங்கனா!!
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத் 20 கிலோ எடை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நடிகை கங்கனா ரனாவத் 20 கிலோ எடை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சசிகலா வேடத்தில் பூர்ணாவும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தலைவி படம் வருகிற ஜூன் மாதம் 26–ந்தேதி திரைக்கு வருகிறது.
ஏற்கனவே கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில் கங்கனா ரனவுத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் புதன்கிழமை தனது ட்விட்டரில், வரவிருக்கும் `தலைவி ' படத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் 20 கிலோ எடை அதிகரித்துள்ளார் என்பதை வெளிப்படுத்தினார்,`