நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படம் 'துப்பறிவாளன் 2'. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் இத்திரைப்படத்தை தயாரிக்கும் விஷால், படத்தின் படப்பிடிப்பு பணிகளை லண்டனில் நடத்தியதாக தெரிகிறது. தனது 'சக்ரா' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, லண்டன் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை துவங்க இயக்குநர் மிஷ்கின் முடிவு செய்தார், இதனைத்தொடர்ந்து புதுமுக நாயகி அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் கொண்டு படத்தின் வேலை நடைப்பெற்று வந்தது. இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, சென்னை திரும்பியது படக்குழுவுடன் இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.



இதனிடையே படத்தின் பொருட்செலவு, படப்பிடிப்பு சமயத்தில் நடந்து கொண்ட விதம் உள்ளிட்ட காரணங்களால் விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகினார், பின்னர் வேறு வழியின்றி இயக்குநர் பொறுப்பையும் விஷால் ஏற்றார்.


படத்தின் பணிகளை முடிக்க இயக்குநராக அவதாரம் ஏற்ற விஷால் இந்த படத்தை தனது முதல் படமாக (இயக்குநராக) அறிவித்து, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை தற்போது வெளியிட்டுள்ளார். நடிகர் விஷால் நடிப்பதற்கு முன்னதாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.