காலா படத்தில் இடம்பெற்றுள்ள ”கண்ணம்மா.” பாடலின் ப்ரோமோ வெளியாகி சில மணிநேரத்தில் 4.32 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் ரஜினி அவர்கள் இணைந்து பணிபுரியும் திரைப்படம் காலா. 



ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள்.


சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்திருக்கிறார்கள்.


படத்தின் வேலைபாடுகள் முடிவடைந்து வரும் ஜூன் 7 அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.