தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி தீபாவை வம்பு இழுக்க மறுபக்கம் ரியா ஆனந்தை ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது கார்த்திக் தீபாவிடம் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு அதை ஏன் என்கிட்ட சொல்லல என்று கேட்டு இனிமே நீங்க சார் எல்லாம் கூப்பிடாதீங்க வேற மாதிரி மாமா வாங்க போங்கன்னு கூப்பிடுங்க என்று சொல்லி இல்ல வேண்டாம் அது ரொம்ப பழசா இருக்கு மீனாட்சி எல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடுறாங்க நீங்களும் அதே மாதிரி சொல்லுங்க என்று சொல்ல தீபா வாங்க போங்க என பேசி பழகுகிறாள். 



கோவிலுக்கு செல்லும் தீபா


இதைத் தொடர்ந்து தீபா விளக்கு போடுவதற்காக கோவிலுக்கு கிளம்பிச் செல்ல அபிராமிக்கு பதில் அவளுடன் மீனாட்சி வருகிறாள். என்னக்கா எப்பவும் அத்த தான வருவாங்க இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க என்று கேட்க இன்னைக்கு எனக்கு கல்யாண நாள் அதனால விளக்கு போட வருவதாக சொல்கிறாள். 


பிறகு இருவரும் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது ரியா மற்றும் ஆனந்த் ஒன்றாக வருவதை பார்க்கிறார் தீபா. மீனாட்சி இதைப் பார்த்து விடாமல் தடுத்து எனக்கு ஒரு தர சந்திக்க வேண்டிய வேலை இருக்கு நான் பாத்துட்டு வந்துடுறேன் என சொல்லி மீனாட்சியை வீட்டுக்கு அனுப்புகிறாள். 


மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள் லிஸ்ட்! யார் குக்-யார் கோமாளி? முழு பட்டியல்..


ரியாவை பின்தொடரும் தீபா


அதன் பிறகு தீபா அவர்களை பின்தொடர்ந்து செல்ல இருவரும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு செல்வது தெரியவர தீபா கார்த்திக்கு போன் போட போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தீபா இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Suriya 43 Update: சூர்யா - சுதா கொங்கரா படம் கைவிடப்பட்டதா? லேட்டஸ்ட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ