கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக், தீபாவுக்கு சாந்தி முகூர்த்தம்.. சர்ப்ரைஸ் கொடுத்த அபிராமி
Karthigai Deepam Today`s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.
கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி தீபாவை கூப்பிட்டு நீ ஒரு பாட்டு பாடு, நீ பாடி நான் கேட்டதே இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தீபா ஒரு பாடலை பாடி முடிக்க அபிராமி அதை கேட்டு ரசித்து பாராட்டுகிறாள், பிறகு உனக்காக ஒரு விஷயம் பண்ண போறேன் என்று சொல்லி கொண்டிருக்க வீட்டிற்குள் ஜோசியர் என்ட்ரி கொடுக்கிறார். அபிராமி ஜோசியரை வரவேற்று உட்கார வைக்கிறாள்.
எமோஷனலாகும் தீபா
அதன் பிறகு கார்த்திக்கும் தீபாவுக்கும் கல்யாணமாகி ரொம்ப நாள் ஆகுது, ஆனால் இன்னும் நடக்க வேண்டியது எதுவும் நடக்கல என்று சொல்லி சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து தர சொல்ல அதை கேட்டு தீபா எமோஷனாகிறாள். மீனாட்சியும் மைதிலியும் முருங்கை காயாக சமைத்து நினைத்ததை சாதிச்சிட்ட போல என்று கலாய்க்கின்றனர்.
தீபா நான் இதையெல்லாம் நினைச்சு சமைக்கல என்று சொல்லியும் அவளை கலாய்த்து எடுக்கின்றனர். அதன் பிறகு ஜோசியர் நாள் குறித்து தர மீனாட்சி இன்னைக்கு ஒரு நாள் நான் வீட்டுக்குள் வரேன், தீபாவோட ரூமை நான் அலங்காரம் செய்கிறேன் என்று சொல்கிறாள். மறுபக்கம் ரம்யாவும் கம்பெனியின் மாணிக்கம் கார்த்தியிடம் இன்னைக்கு ஒரு புது மிஷின் வருது, அதை இன்ஸ்டால் பண்ண போறாங்க, எப்படி பண்றாங்கனு பார்த்து கத்துக்க என்று சொல்கிறார்.
மிஷினை இன்ஸ்டால் செய்யும் போது கார்த்திக் இதை இப்படி பண்ண கூடாது, அப்படி பண்ணா மிஷின் பத்திக்கிட்டு எரியும் என்று சொல்ல எல்லாரும் ஷாக்காக ரம்யா கீழே இறங்கி வருகிறாள், நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு. இத்தனை வருஷமாக இவங்க எல்லாம் வேலை செய்யுறாங்க என்று சொல்லி கோபப்பட கார்த்திக் அமைதியாகி விடுகிறான்.
மேலும் படிக்க | நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய படம்! பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!
கோவப்படும் ரம்யா
கொஞ்ச நேரத்தில் அவன் சொன்னபடியே மிஷின் தீ பிடித்து எறிகிறது. இதனால் ரம்யா கோபமாகி கேபினுக்கு சென்று விடுகிறாள், கார்த்திக்கை கூப்பிட்டு இந்த முறை நீ சொன்ன மாதிரி நடந்து விட்டது என்பதற்காக மத்த விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைகிற வேலையை வச்சுக்காமல் உன்னுடைய வேலையை ஒழுங்கா பாரு என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறாள். வீட்டில் மீனாட்சியும் மைதிலியும் தீபாவை கலாய்த்தபடியே ரூமை தயார் செய்கின்றனர்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?
கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | Thug Life Update: நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது தக் லைஃப் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ