நடு இரவில் ரம்யா.! கவலையே படாத தீபாவை போட்டு தள்ளிடலாம் -கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam Today Episode: இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Tamil Serial Karthigai Deepam Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் தீபாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ரம்யா நேரா ரியா இருக்கும் இடத்திற்கு வந்து நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை சொல்லி எனக்கு எப்படியாவது கார்த்திக்கை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். ரியா நீ கவலையே படாத தீபாவை எப்படியாவது போட்டுக் தள்ளிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.
மறுபக்கம் அபிராமி வீட்டில் இன்னும் பத்து நாளில் கார்த்திக் தீபாவுக்கு கல்யாணம் என்பதால் அதுவரை அவர்கள் தனித்தனியாக தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதனால் கார்த்திக்குடன் ஆனந்தையும் மீனாட்சி உடன் தீபாவையும் படுத்துக் கொள்ள சொல்கின்றனர்.
அதன் பிறகு மீனாட்சி கார்த்தியிடம் பஞ்சை கொண்டு வந்து கொடுக்க அவன் எதுக்கு என்று கேட்க வச்சுக்கோங்க உதவும் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். பிறகு தீபாவுக்கும் அவளுக்கும் இடையில் தலையணைகளை அடுக்கி வைக்க தீபா எதுக்கு இதெல்லாம் என்று கேட்க மீனாட்சி போக போக புரியும் என்று சொல்கிறாள்.
கார்த்திக் பஞ்சை தூக்கி போட்டு விட தீபா தலையணைகளை எடுத்து விடுகிறாள். அதன் பிறகு நடு இரவில் ஆனந்த் குறட்டை சத்தம் தாங்காமல் கார்த்திக் தூக்கத்திலிருந்து எழுந்து அண்ணி பஞ்சை கொடுத்தது இதற்குத்தானா என்று புலம்பியபடிபுலம்பியபடி பஞ்சை தேடுகிறான்.
அதேபோல் இங்கே மீனாட்சி தீபாவின் மீது காலை தூக்கி போட அவள் தூக்கம் கலைந்து தூங்க முடியாமல் தவிக்கிறாள். இதனால் தீபா வெளியே வர கார்த்திக் நின்று கொண்டிருக்க தீபாவை பார்த்ததும் தூங்கலையா என்று கேட்க உங்களை பார்க்கணும் போல இருந்தது அதனாலதான் வெளியில வந்தேன் என்று சொல்கிறாள்.
பிறகு உங்களுக்கு ஏதாவது வேணுமா என்று கேட்க கார்த்திக் எனக்கு குல்பி வேண்டும் என்று சொல்ல தீபா உடனே கொண்டு வந்து தரேன் என்று வேக வேகமாக சென்று ரம்யாவுக்கு போன் போட்டு குல்பி வாங்கிட்டு வந்து கொடுக்கும்படி உதவி கேட்கிறாள். ரம்யாவும் அதைக் கொண்டு வந்து கொடுக்க தீபா நானே உங்களுக்காக வெளில போய் வாங்கிட்டு வந்தேன் என்று பொய் சொல்லி கார்த்திக்கிடம் கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் கார்த்திக் நீங்க சொன்னத நான் நம்பிட்டேன். ரம்யா கார் வந்து போனதை நானும் கவனிச்சேன் என்று சொல்கிறான்.
அடுத்த நாள் காலையில் ரம்யா வீட்டு காலிங் பெல் அடிக்க அவள் கதவைத் திறக்க சேகர் அங்கு நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். உன்னை தான் வெளியூர் போக சொல்லி பணம் கொடுத்தனே போகலையா என்று கேட்க அவன் அந்த பணத்தை எல்லாம் சூதாட்டத்தில் கோட்டை விட்டுட்டேன் இன்னும் கொஞ்சம் பணம் தாங்க என்று கேட்கிறான்.
ரம்யா வேறு வழியின்றி கொஞ்சம் பணத்தை கொடுத்து ஒழுங்கு மரியாதையா வெளியூர் ஓடிப் போயிடு என்று திட்டி அனுப்புகிறாள். இதை ரம்யாவின் அப்பா பார்த்து விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க - குக் வித் கோமாளி 5ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! அனைவருக்கும் பிடித்தவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ