கார்த்திகை தீபம்: காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா... குழப்பத்தில் கார்த்திக்
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் : காட்டிக்கொடுத்த மயில் வாகனம்.. ப்ளேட்டை மாற்றிய மாயா... குழப்பத்தில் கார்த்திக்
Karthigai Deepam Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் மயில் வாகனம் இது மாயாவோட புடவை என கார்த்திக்கிடம் சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சாமுண்டீஸ்வரி மல்லிகா டாக்டரின் குழந்தை குறித்து நலம் விசாரிப்பதற்காக கார்த்தியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வருகிறாள். மறுபக்கம் மாயாவும் அபார்ஷன் செய்ததற்கான ரிப்போர்ட்டுகளை வாங்குவதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகிறாள்.
இது ஹாஸ்பிடல் டாக்டர் மல்லிகா குழந்தைக்கு காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் மாயா உள்ளே வர குழந்தை மாயாவை பார்க்க மாயா குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். குழந்தை காட்டி கொடுத்து விடுமோ என பயப்பட மாயாவை மறந்து விட்ட குழந்தை அவளைப் பார்த்து சிரித்தபடி இருக்க இவள் நிம்மதியாகிறாள்.
அதைத்தொடர்ந்து மாயா அங்கிருந்து வெளியே வர சாமுண்டீஸ்வரி மற்றும் கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர இவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகி ஓடி ஒளிந்து கொள்கிறாள். இந்த சமயத்தில் நர்ஸ் ரிப்போர்ட்டுகளை கொண்டு வந்து மாயா மாயா என பெயர் சொல்லி கூப்பிடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் மாயா வெளியே வந்து என் பேரு சந்தியா பெயரை மாத்தி சொல்றீங்க என்று சொல்லி ரிப்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டே நைசாக கிளம்ப முடியவில்லை கார்த்திக் மாயாவை பார்த்து விடுகிறான். அந்த புடவை குறித்து விசாரிக்க அந்த புடவை மண்டபத்தில் இருந்தது நான் தான் மேனேஜரிடம் எடுத்துக் கொடுத்தேன் என பொய் சொல்கிறாள். கார்த்திக் மேனேஜருக்கு போன் போட்டு விசாரிக்க அவரும் ஆமா மாயா தான் அந்த புடவையை கொண்டு வந்து கொடுத்தாங்க என சொல்கிறான்.
மேலும் படிக்க | Squid Game 2 எப்படியிருக்கு? முதல் சீசன் அளவிற்கு இல்லையா? விமர்சனம் இதோ!
அதைத் தொடர்ந்து வீட்டில் கார்த்திகை எப்படியாவது இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க ரேவதி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். பிறகு சாமுண்டீஸ்வரி தலைமையில் பெண்களுக்காக பெண்கள் அனைவரும் சேர்ந்து கோவில் கட்டுகின்றனர். அதற்கான கும்பாபிஷேக செலவை சாமுண்டீஸ்வரி ஏற்றுக் கொள்வதாக சொல்கிறாள்.
பிறகு கலசத்தை சாமுண்டீஸ்வரி வீட்டில் வைத்து பூஜை செய்து கொடுக்குமாறு மற்ற பெண்கள் சொல்கின்றனர். இதை சாதகமாக்கி கலசத்தை திருடி பழியை கார்த்திக் மீது போட சந்திரா கலா திட்டமிடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | வதந்தி வெப் தொடர் எப்படி இருக்கு? விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ