“மியூசிக் பாேட்டா ச்சீ தூன்னு சொல்லுவாரு..” இளையராஜாவின் இன்னொரு முகத்தை கூறிய கார்த்திக் ராஜா!
Karthik Raja Talks About Ilaiyaraaja: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, தனது தந்தை குறித்து சுவாரஸ்யமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Karthik Raja Talks About His Father Ilaiyaraaja: இந்திய திரையுலக இசையமைப்பாளர்களுள், ‘லெஜண்ட்’ கலைஞராக இருப்பவர், இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவரது மகள் பவதாரிணி, சில வாரங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.
கார்த்திக் ராஜா:
இளையராஜா மட்டுமன்றி, அவரது குடும்பமே இசைக்குடும்பமாகவும் கலைக்குடும்பமாகவும் உள்ளது. இவரது சகோதரர் கங்கை அமரன் திரைப்பட இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் உள்ளார். கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு-பிரேம் ஜி ஆகிய இருவரும் திரைத்துறையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர். அதே போல, இளையராஜாவின் இரு மகன்களாக கார்த்திக் ராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைப்பாளர்களாக உள்ளனர்.
கார்த்திக் ராஜா, 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாண்டியன் படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானார். இளையராஜாவின் வாரிசாக இருந்தாலும், கார்த்திக் ராஜா இசையை முறையாக பயின்று பயிற்சி பெற்றார். தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோவிற்கு சென்ற இவர், மிக இளம் வயதிலேயே புதிய வடிவில் இசையமைக்க கற்றுக்கொண்டார். நினைக்க தெர்ந்த மனமே படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு 13 வயதிலேயே கீ-போர்டு இசையமைத்திருந்தார். இதையடுத்து, நாயகன் படத்திற்கும் சில இடங்களில் இசையமைத்திருப்பார்.
தந்தை குறித்து பேசிய கார்த்திக் ராஜா:
கார்த்திக் ராஜா, தனது தந்தை குறித்து ஒரு நேர்காணில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், கார்த்திக் ராஜாவை பேட்டி எடுக்கும் பெண், “நீங்கள் அம்மா பிள்ளையா..” என்று கேட்க, அதற்கு அவர், “அம்மா பிள்ளைதான். அப்பா மேல் நிறைய மரியாதை இருக்கும்” என்றும் கூறினார். மேலும், அப்பா வீட்டிலேயே லெஜண்ட்தான் என்றும் தங்களுடன் பேசுவதையே பெருமையாக நினைப்போம் என்றும் தெரிவித்தார். மற்ற வீடுகளில் செய்வது போல தனது அப்பாவிடம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
“ச்சீத்தூன்னு துப்பி குடுப்பாரு..”
தொடர்ந்து கேள்விகள் தொடர, “நீங்கள் போடும் மியூசிக் எல்லாம் அப்பாவிடம் போட்டு காண்பிப்பீர்களா..?” என்று கேட்க, அதற்கு கார்த்திக் ராஜா “அதுக்கெல்லாம் சான்ஸே கிடையாது..” என்கிறார். மேலும் தான் ஏதாவது மியூசிக் போட்டு காண்பித்தால் “ச்சீ தூன்னு துப்பிடுவாங்க..” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதற்கு அந்த பெண், “இப்போ சிரிச்சிட்டே சொல்றீங்க..ஆனா அப்போ சிரிப்பு வந்ததா?” என்று கேட்க, அதற்கு அவர், “மனசு கஷ்டமா இருக்கும், கைட் பண்ண மாட்டறாங்களேன்னு மனசுல இருக்கமா இருக்கும்..” என்று புன்முருவலுடன் கூறினார்.
நெட்டிசன்களின் ரியாக்ஷன்:
இளையராஜா குறித்து கார்த்திக் ராஜா பேசியுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது குறித்து கருத்துகளை கமெண்டுகளில் வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், “அனிமல் திரைப்படம் உண்மையில் இப்படித்தான் இருக்கும் போல..” என்று கூறியுள்ளார். இன்னொருவர், “இளையராஜா நல்ல கலைஞராக ஜெயித்தாலும், ஒரு தந்தையாக தோற்று விட்டார்” என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், “சொந்த புள்ளைய சொந்தகார புள்ளை மாதிரி நடத்தி இருக்காரு” என்று கூறியுள்ளார். இன்னும் சிலர், கார்த்திக் ராஜா அதிகம் கவனிக்கப்பட வேண்டிய இசையமைப்பாளர் என்றும், ‘உல்லாசம்’ படத்தில் அவரது பாடல்களை தான் விரும்பி கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் ராஜாவின் ஹிட் பாடல்கள்..
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள பாடல்களுக்கென பல ரசிகர்கள் உள்ளனர். இவர் இசையமைத்திருந்த டும் டும் டும், காதலா காதலா, உள்ளம் கொள்ளை போகுதே போன்ற படங்கள் கமர்ஷியலாக ஹிட் அடித்தன. கார்த்திக், இப்படங்களில் இசையமைத்திருந்த பாடல்களும் பெரிய ஹிட் அடித்தன.
மேலும் படிக்க | இது எனக்கு மறக்க முடியாத நாள்! நெகிழ்ந்து போன சிவகார்த்திகேயன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ