லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.  நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் அள்ளியது. தமிழில் இந்த படம் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியானது.  அந்த சமயம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி படம் களமிறங்கியது, இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கைதி படத்தில் தான் பணிபுரிந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த இந்த நடிகர்


அதுமட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ் கைதி படத்தையடுத்து  விஜயை வைத்து மாஸ்டர் படம் இயக்க இருந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் இவர் இயக்கத்தில் வெளிவரும் கைதி படம் எப்படி இருக்கும் என்று அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.  கதாநாயகி எதுவும் இல்லாமல் வெறும் சண்டை காட்சியை மட்டுமே வைத்து ஹிட்டான பெருமைக்குரிய படம் இது.  கிட்டத்தட்ட இப்படத்தின் 98%காட்சிகள் இரவில் மட்டுமே படமாக்கப்பட்டு இருந்தது.  இந்த படம் கார்த்தியின் திரை பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்றே குறிப்பிடலாம்.



தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.  அதோடு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு கிடைக்கும் விதமாக இப்படம் ரஷ்ய மொழியில் வெளிவர இருக்கிறது.  இது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது, இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.  கைதி படத்திற்கு ரஷ்ய மொழியில் 'Узник' இவ்வாறு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு இருக்கிறது.  இந்த திரைப்படம் ரஷ்ய ரசிகர்களையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 



மேலும் படிக்க | ரஜினி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR