நடிகர் கார்த்தி ’பொன்னியின் செல்வன்’ சூட்டிங்கில் பங்கேற்று முடித்தவுடன் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மித்ரன் இயக்கத்தில் ஸ்பை திரில்லராக உருவாகும் சர்தார் திரைபடத்தின் சூட்டிங்கிலும் பங்கேற்றார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், விருமன் படத்தில் முழுமையாக கவனம் செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'SK20'-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக RRR நடிகை?


தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் ‘சர்தார்’ திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கியதால், அதில் மீண்டும் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராசிகண்ணா நடிக்கிறார். அண்மையில் சர்தார் படத்தில் நடிப்பதை தன்னுடைய சமூகவலைதளத்திலும் ராசிகண்ணா தெரிவித்திருந்தார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் சூழலில், பிஸினஸையும் தொடங்கியுள்ளது சர்தார் குழு. அண்மையில் கிடைத்துள்ள தகவலின்படி, நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளது.



படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகாது. தியேட்டர் ரிலீஸூக்குப் பிறகான டிஜிட்டல் உரிமை மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனால், தியேட்டரில் ரிலீஸான பிறகே சர்தார் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும். சர்தார் திரைப்படத்தில் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் கார்த்தி நடிக்கிறார். அதில் வயதான கெட்டப் ஒன்றும் உள்ளது. சிம்ரன், ரஜிஷா விஜயன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் முரளி சர்மா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR