சீனாவில் நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட உள்ள "பரியேறும் பெருமாள்".


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் கருப்பி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்திருந்தது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே இந்த நாய் வந்தாலும், அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டது.


இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று,  நல்ல கதை கொண்ட சிறிய பட்ஜெட் படம் என பாராட்டப்பட்டது. இதில் நடிகர் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். 


இந்நிலையில் தற்போது சீனாவில் நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவான ஸ்பிரிங் ஸ்கிரினிங்னின் என்ற ஒரு பகுதியாக ஹைனன் தீவில் உள்ள ஐந்து நகரங்களில் கதிர், ஆனந்தி நடிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் படத்தை திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


 



 


இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.