கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன்! வெளியான முக்கிய வீடியோ!
கவின் நடித்துள்ள `லிப்ட்` புதிய திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இவர்’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதல்படியாக ’லிப்ட்’ (Lift) படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) பாடியுள்ளார். இந்த தகவலை நடிகர் கவின் (Kavin) தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியதாவது.
லிப்ட் (Lift) படத்தில் இடம்பெற்றுள்ள ’இன்னா மயிலு’ என்ற பாடலை உங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த பாடலை பாடியவர் உங்கள் எங்கள் சிவகார்த்திகேயன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் கனா திரைப்படம் உட்பட ஒரு சில படங்களில் பாடி உள்ளார். தற்போது அவர் மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR