சாக்லேட் ஹீரோ ஜீவாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கீ.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இணைய திருடர்கள், இணைய தகவல் பாதுகாப்பு கருவி போன்ற விஷயங்களை மையப்படுத்தி திரைகதை நகர்வது போல் டீசர் அமைக்கப்பட்டுள்ளது. 


தற்போதைய காலக்கட்டத்தில் இணைய தகவல் திருடர்களின் பயம் அதிகமாக நிலவிவரும் நிலையில், நாம் எவ்வாறு இணையத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய புரிதல் அவசியமாகிறது.


இந்நிலையில் இணைய பயன்பாட்டினை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கீ’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



’கீ’; அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்குகிறார். ஜீவா, நிக்கி கல் ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் இப்படத்தினை தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். 


முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வருகின்றது.