Top 10: கீர்த்தி சுரேஷ் முதலிடம், லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடமில்லையா?
2021 ஆம் ஆண்டு முழுவதும் டிவிட்டரில் அதிகம் பதிவிட்டப்பட்ட தென்இந்திய நடிகைகள் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால், இந்த ஆண்டு முழுவதும் நடைபெற்ற அல்லது நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சினிமா துறையில் இந்த ஆண்டு தேசிய அளவில் மற்றும் தென்னிந்திய அளவில் முதல் இடம் பிடித்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை டேட்டாவுடன் சினிமா துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகள் டாப் 10 லிஸ்ட் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!
இந்தப் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் (Keerthy suresh) முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். "இது என்ன மாயத்தில்" தொடங்கிய அவரது பயணம், தொடரி, சர்க்கார், ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலேயே நடித்து வருகிறார். அண்மையில் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். டிசம்பர் 2 ஆம் தேதி சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ‘மரக்கர் அரபிக்கடலின் சிம்ஹம்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு முழுவதும் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதில், கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை பூஜா ஹெக்டேவும், சமந்தா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
காஜல் அகர்வால் 4வது இடத்திலும், மாளவிகா மோகன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ராகுல் ப்ரீத்தி சிங், சாய்பல்லவி, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் அனுப்பம்ஹேர் ஆகியோர் டாப் 10-ல் உள்ளனர். சர்ப்பிரைஸான செய்தி என்னவென்றால், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் (Nayanthara) பெயர் இந்த லிஸ்டில் இல்லை. நயன்தாராவின் நடிப்பில் இந்த ஆண்டு நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் வெளியானது. இருப்பினும், அவரது பெயர் டிவிட்டர் டாப் 10 தென்னிந்திய நடிகைகள் லிஸ்டில் இல்லை.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR