மீண்டும் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்!
சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். தனது நேர்த்தியான நடிப்பால் திரைத்துறையில் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை இந்திய சினிமாவில் தக்கவைத்துள்ளார்.
சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். வசூல் ரீதியாக இப்படம் ஓரளவு வெற்றி பெற்றாலும், கதை ரீதியாக கொஞ்சம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. விஸ்வாசம், திருப்பாச்சி, வேதாளம் போன்ற படங்களின் கலவையாக இருப்பதாகவும் சில எதிர்மறை விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து இருக்கக்கூடும். இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படமும் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளிவந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருப்பார்.
இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜீத் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவியும், லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷூம் நடிக்க இருக்கிறார். தமிழ் சூப்பர் ஸ்டார் இதை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
ALSO READ தனுஷின் மாறன் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR