கேரளா மாநில விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய Kappela திரைப்படம்
கேரளா மாநில சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரளா மாநில சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: கேரள மாநில திரைப்பட விருதுகள் 2020 இங்கு அறிவிக்கப்பட்டது. 'Vellam' படத்தில் ஜெய சூர்யாவின் சிறந்த நடிப்பிற்காக சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். 'கப்பேலா' படத்துக்காக அன்னா பென் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். மூத்த நடிகை சுஹாசினி தலைமையிலான நடுவர் குழு விருது வென்றவர்களை தேர்வு செய்தது.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ (The Great Indian Kitchen) சிறந்த திரைப்படமாகவும், ‘அய்யப்பனும் கோஷியும்’ (Ayyapanum Koshiyum) சிறந்த பாப்புலர் திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சித்தார்த் சிவா சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சஜி செரியன் இந்த விருதுகளை அறிவித்துள்ளார். நடுவர் மன்றத் தலைவர் சுஹாசினி மணிரத்னம், கேரள சாலசித்ரா அகாடமி தலைவர் மற்றும் நடுவர் குழு உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
விருது வென்றவர்களின் பட்டியல்:
சிறந்த நடிகர்- ஜெயசூர்யா (வெல்லம்)
சிறந்த நடிகை- அன்னா பென் (கப்பேலா)
சிறந்த திரைப்படம் - ஜியோ பேபி இயக்கிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
சிறந்த இயக்குனர் - சித்தார்த் சிவா ('என்னிவர்')
சிறந்த இரண்டாவது திரைப்படம் - சென்னா ஹெக்டே இயக்கிய ‘திங்கலச்ச நிச்சயம்’
சிறந்த அறிமுக இயக்குனர் - முஸ்தபா (கப்பேலா)
குணச்சித்திர வேடத்தில் சிறந்த நடிகர் - சுதீஷ் (‘என்னிவர்’, ‘பூமியில் மனோகர சோகர்யம்’)
சிறந்த கதாபாத்திரம் - ஸ்ரீரேகா (வெயில்)
சிறந்த பிரபலமான திரைப்படம் - சச்சி இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’
சிறந்த குழந்தை கலைஞர் ஆண்– நிரஞ்சன் எஸ் (‘காசிமினிட் காதல்’)
சிறந்த குழந்தை கலைஞர் பெண் - ஆரவ்ய வர்மா ('பியாலி')
ALSO READ Article 15 ரீமேக்: அதிகார்வபூர்வமாக வெளியானது டைட்டில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR