தொடங்கிவிட்டது கேஜிஎஃப் 3 - தயாரிப்பாளர் அறிவிப்பு
கேஜிஎஃப் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. தமிழ் பட ஹீரோவுக்கு இணையாக யாஷுக்காகவும் ரசிகர் படை தமிழ்நாட்டு தியேட்டர்களில் கூடியது. அதேபோல் வட இந்தியாவிலும் கேஜிஎஃப் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவை படத்துக்கு கொடுத்து வெற்றி பெற செய்திருக்கின்றனர். முதல் நாளில் படமானது 130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. கேஜிஎஃப் 2 இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வியாபாரத்தில் யாஷ் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்.
இந்தச் சூழலில் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் இறுதி காட்சியில் மூன்றாம் பாகம் வரவிருக்கிறது என்பது கூறப்பட்டிருந்ததால் அதற்கான பணிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.
மேலும் படிக்க | பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..! அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?
இந்நிலையில் கன்னட சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கேஜிஎஃப் இரண்டு பாகங்களின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா, “தங்களது குழு கே.ஜி.எஃப் 3-க்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டது. விரைவில் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.
இதற்கிடையே கேஜிஎஃப் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின்போது பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல்,“கேஜிஎஃப் படத்தின் அடுத்த பாகம் வெளியாக இன்னும் குறைந்தது 8 வருடங்களாவது எங்களுக்கு இருக்கிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க |சமந்தாவை தொடர்ந்து ஒரே பாடலில் கொடிகட்டி பறக்கப்போகும் பூஜா ஹெக்டே?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR