KiKi Challenge புகழ் டார்க்கி-க்கு GRAMMY விருது வழங்கப்பட்டது!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 61-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 61-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அமெரிக்க இசை உலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டு இந்த விழாவில் வழங்கப்படுகிறது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த பிரமாண்ட விழாவில் 49 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இந்த ஆண்டின் சிறந்த பாடலாக childish gambino-வின் This Is America என்ற மியூசிக் ஆல்பம் தேர்வு செய்யப்பட்டது.
பிரபல பாப் இசைப் பாடகி லேடி காகா-விற்கு மூன்று பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. தனி நபர் பிரிவு மற்றும் குழுப் பிரிவில் சிறந்த பாப் பாடலுக்கான விருதுகளை வென்ற லேடி காகா, சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் தட்டிச் சென்றார். இதில் Shallow என்ற பாடலை எழுதி பாடியதற்கு லேடி காகா இரு விருதுகள் பெற்றுள்ளார்.
அதேவேலையில் KiKi Challenge புகழ் டார்க்கி., தனது 'God's Plan' என்னும் பாப் பாடலுக்காக சிறந்த ராப் பாடகர் விருதினை பெற்றுள்ளார்.