கொரோனா பாதிப்பு; வீட்டு தனிமையில் நடிகை குஷ்பு
நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் ஓயவில்லை. இந்த பெருந்தொற்றானது பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி உருவாகி வருகின்றது. அதன்படி இந்தியாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது.
முதல் அலையில் இந்த எண்ணிக்கையை எட்ட 120 நாட்கள் ஆனது. இரண்டாவது அலையில் இந்த எண்னிக்கை 50 நாட்களில் எட்டப்பட்டது. தற்போது வெறும் 10 நாட்களில் ஒரு லட்சம் ஒரு நாள் கொரோனா (Corona virus) எண்ணிக்கையை நாம் கடந்து விட்டோம்.
ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான்
இதற்கிடையில் தமிழகத்தில் (TN Corona Update) குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதன்படி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்கள், இதனால் சில மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிப்பு அடைய சினிமா துறையில் நிறைய பிரபலங்களும் கொரோனா நோய் தொற்றில் சிக்கிவிடுகிறார்கள்.
இந்த மூன்றாம் அலை தொற்றானது கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோரை தாக்கியது. அதேபோல் நடிகர் அருண் விஜய், நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினர், நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி நேற்று நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. தற்போது இன்று காலை நடிகை ஷோபனாவுக்கு (Actress Shobana) இந்த கொடிய கொரோனா பாதிப்பு ஏற்பட்ட செய்தி வெளியானது.
இந்த நிலையில் தற்போது நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில் கூறியதாவ்து., இரு அலைகளுக்கு பிறகு தற்போது இறுதியாக 3வது அலையில் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் தொடர்ந்து சளி பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தேன், அதில் எனக்கு கொரோனா உறுதியானது. அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. எனவே என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கொரோனா சோதனை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR