நயன்தாரா நடிக்கும் 'லேடி சூப்பர்ஸ்டார் 75' படத்தில் ஒன்பது பிரபல நட்சத்திரங்கள் இணைந்தது குறித்து அறிவிப்பு மழை பெய்து வருகிறது. குமாரி சச்சு, கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், அச்சுதகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு தனது குறும்படமான 'தி கேப்' மூலம் கவனத்தை ஈர்த்த, இயக்குனர் ஷங்கரின் முன்னாள் அசோசியேட் நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார், இது ஒரு அவுட் அண்ட் அவுட் கமர்ஷியல் என்டர்டெயின்னர் என்று கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் NAAD Sstudios ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்!



தென்னிந்தியாவில் பரபரப்பான இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு தீவிரமாக இசையமைத்து வருகிறார். தமிழில் கடைசியாக விஜய் நடித்த 'வாரிசு' படத்திற்கு தமன் இசையமைத்தார்.  மேலும் இப்படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தற்போது, ​​'நயன்தாரா 75' படத்தில் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "#LadySuperstar75 #N75க்கான இந்த அற்புதமான தொழில்நுட்பக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.



கலை இயக்குனராக துரைராஜ் இப்படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்ய உள்ளார்.  'நயன்தாரா 75' படத்தில் நயன்தாராவுடன் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இந்த 'ராஜா ராணி' ஜோடி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.  இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே படத்திற்கு எதிர்பார்ப்பை உண்டு செய்ய, அடுத்த சில நாட்களில் மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நயன்தாரா நடிப்பில் இறைவன் மற்றும் ஜவான் படங்கள் வெளியாக உள்ளது.  


மேலும் படிக்க | சூரியின் விடுதலை..மொத்த வசூல் இத்தனை கோடியா? இதோ முழு தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ