This Week OTT Releases Lal Salaam, Lover, Merry Christmas Check Full List In Tamil : ஓடிடி தளங்களின் பெருக்கத்தால் தியேட்டர்களில் வெளியாகும் புதுப்புது படங்கள் விரைவில் ஆன்லைனில் ஸ்டிரீம் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. பழைய படங்கள் முதல், சமீபத்தில் வெளியான படங்கள் வரை பல படைப்புகளை நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5 உள்ளிட்ட பிரபலமான இந்திய ஓடிடி தளங்களில் பார்க்கும் வகைளில் அதற்கு ஏற்ற சந்தாக்களும் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடி தளங்களில் பல புது படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


லால் சலாம்:


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம், லால் சலாம். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த், லிவிங்க்ஸ்டன், செந்தில் உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் வந்தனர். மத அரசியலையும், கிரிக்கெட் விளையாட்டையும் வைத்து எடுக்கப்பட்ட படம்,  லால் சலாம். இப்படம், வரும் 8ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை. 



மெர்ரி கிறிஸ்துமஸ்:


விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த படம், மெர்ரி கிறிஸ்துமஸ். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராதிகா சரத்குமார், டின்னு ராஜ் ஆனந்த், சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். இப்படம், தியேட்டர்களில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. வரும் 8ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், மெர்ரி கிறிஸ்துமஸ் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இன்னும் வெளியிடவில்லை. 


மேலும் படிக்க | ‘காமெடி கிங்’ கவுண்டமணி சொத்து மதிப்பு வெறும் இத்தனை கோடி தானா?



லவ்வர்:


‘குட்நைட்’ பட புகழ் மணிகண்டன் ஹீரோவாக நடிட்துள்ள படம், லவ்வர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருக்கிறார். புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ், இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இந்த காலத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் டாக்சிக் காதலை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படம், தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் மார்ச் 8ஆம் தேதியன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


ஹனுமன்:


பொங்கலன்று வெளியாகி வெற்றி பெற்ற படம், ஹனுமன். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளை தாண்டி ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன் ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்த படம், ஜீ 5 தளத்தில் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


வடக்குப்பட்டி ராமசாமி:


சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் 2ஆம் தேதி வெளியான படம், வடக்குப்பட்டி ராமசாமி. சந்தானம் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் காமெடி களஞ்சியமாக இப்படம் இருப்பதாக தியேட்டர்களில் வெளியான போது இப்படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தது. இப்படம், தற்போது ப்ரைம் வீடியோ தளத்தில் வெளிநாடுகளில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.


மேலும் படிக்க | ‘குணா’ பட நாயகி ரோஷிணிக்கு என்ன ஆச்சு? முழு தகவல் இதோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ