ஜெயம் ரவி விவாகரத்து: அவகாசம் கேட்ட ஆர்த்தி! நடந்தது என்ன?
Jayam Ravi Divorce : நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் கடந்த சில மாதங்களே பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
Jayam Ravi Divorce : குடும்ப நல நீதிமன்றத்தில் எந்த ஒரு விவாகரத்து வழக்கு வந்தாலும் வழக்கு விசாரணைக்கு முன்பாக சமரச மன்றத்திற்கு கணவன் மனைவி இருவரையும் அனுப்பி வைப்பர்.
சமரச மன்றத்தில் தம்பதிகளுக்கு கவுன்சிலிங், விவாகரத்துக்கான காரணம் மற்றும் விவாகரத்தை தவிர்க்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இதற்குப் பிறகும் விவாகரத்து பெற தம்பதியர் ஒத்துப் போகும் நிலையில் மீண்டும் குடும்ப நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.
நடிகர் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் மனைவி ஆர்த்தி அவரது தாயார் வீட்டில் கணவருடன் இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சமயத்தில் சில கருத்துக்களை பொதுவில் பகிர்ந்து இருந்தார் ஆர்த்தி அதே வேளையில் சில குற்றச்சாட்டுகளையும் தனது மனைவி மீதும் மனைவி குடும்பத்தார் மீதும் நடிகர் ஜெயம் ரவி சுட்டி காட்டி இருந்தார்.
சமரச பேச்சுவார்த்தை:
நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனு சமரச மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமரச மன்றத்தில் இன்று விவாகரத்துக்கான காரணம் விவாகரத்தை தவிர்க்க இயலுமா போன்ற விஷயங்களை முன்னிறுத்தி ஜெயம்ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில் ஆர்த்தி தரப்பிலிருந்து தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை சமரச பேச்சுவார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தார். இதன் காரணமாக விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி இடையாள சமரச பேச்சுவார்த்தை வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
என்ன பிரச்சனை?
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருகிறார், ஜெயம் ரவி. இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே எழுந்த பிரச்சனை குறித்து இணையத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவிக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட இதுதான் காரணம் எனக்கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..
மேலும் படிக்க | இயக்குநராக அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி! அவர் படத்தில் ஹீரோ யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ