Actor Vijayakanth In The GOAT Movie AI Images : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் பல ஸ்பெஷலான விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், அதில் முக்கியமாக பார்க்கப்படுவது நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் ஏஐ கேமியோதான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கோட் திரைப்படம்:


இன்னும் 2 தினங்களில் வெளியாகும் தி கோட் திரைப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சினிமாவை விட்டு விலகி, முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய்க்கு, தி கோட் படம் கடைசி சில படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடிக்கின்றனர்.


லைலா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பலரும் எதிர்பாராத சர்ப்ரைஸ்கள் பல காத்துக்கொண்டுள்ளன. அவற்றை படக்குழுவினர் வரிசையாக கூறினாலும், தியேட்டரில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். 


விஜயகாந்த் கேமியோ..


தி கோட் திரைப்படத்தில், பல்வேறு நட்சத்திரங்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் வருவதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் ஏஐ-யையும் இதில் கேமியோ கதாப்பாத்திரத்திற்காக படக்குழுவினர் உபயோகித்திருக்கின்றனர். இதற்கான ஒப்புதலையும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து அவர்கள் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் விஜயகாந்தைதான் தாங்கள் ஏஐ மூலம் உருவாகி இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். தற்போது, விஜயகாந்தின் ஏஐ புகைப்படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது. 


 



இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு ஹார்டீன்களை பறக்க விட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..


தி கோட் படத்தில் இடம் பெற்றிருக்கும் கேமியோக்கள்..


தி கோட் திரைப்படத்தில், நடிகர் விஜயகாந்த் தவிர இன்னும் சில கேமியோ கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, த்ரிஷா. இவர், ஒரு பாடலுக்கு இதில் நடனமாடுகிறாராம். அதே போல, நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய காட்சியில் வருவதாக கூறப்படுகிறது. 


அஜித் டைலாக்கை பேசிய விஜய்..


நடிகர் அஜித்தையும் விஜய்யையும் பல ஆண்டுகளாக ரசிகர்களும் திரையுலகமும் போட்டி நடிகர்களாக பார்த்து வருகிறது. ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மங்காத்தா திரைப்படத்தில் அஜித் பேசிய “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது..” என்கிற டைலாக்கை விஜய் பேசியிருக்கிறார். இதை தவிர இன்னும் பல அஜித் பட ரெஃபரென்ஸ்கள் இதில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் படத்தை பார்க்க, ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்த படம் எப்படிப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ