Vettaiyan Vs The GOAT Box Office Collection Day 1 : ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற்றதா? இங்கு அது குறித்து பார்ப்போம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்டையன் முதல் நாள்:


நடிகர் ரஜினிகாந்த், பல வருடங்களுக்கு பிறகு வித்தியாசமாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படம், வேட்டையன். ஜெய் பீம் படப்புகழ் ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படத்தை பலரும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர். இதில், ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து நடித்திருக்கிறார் அமிதாப் பச்சன். அவர் மட்டுமல்ல மலையாள நாயகி மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 


வேட்டையன் படம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று வெளியானது. வெளியான முதல் நாளே படத்திற்கு எட்டுத்திக்கும் இருந்து கலவையான விமர்சனங்களே வெளியாகின. 


முதல் நாள் வசூல் விவரம்:


வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக ரஜினி படம் என்றாலே முதல் நாளில் கோடிக்கணக்கில் வசூல் வந்து விடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதை கோட் படம் நிரூபித்துள்ளது. இப்படம், உலகளவில் சுமார் ரூ.70 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 22 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு மலேசியா, சிங்கப்பூர்,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வசூல் கிடைத்திருக்கிறது. 


மேலும் படிக்க | 'வேட்டையன் படத்தை போடாதீங்க...' கோவில்பட்டியில் மக்கள் எதிர்ப்பு - என்ன காரணம்?


கோட் வசூல்..


விஜய் நடிப்பில் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான படம், தி கோட். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இது, விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தது. இதனால், வசூலிலும் பெரிய வெற்றி பெற்றது. முதல் நாளில் மட்டும், இப்படம் உலகளவில் சுமார் ரூ.126.3 கோடி வசூல் செய்ததாம்.


வேட்டையன் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் தி கோட் படமே முதல் நாள் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. தி கோட் படத்திற்கு பிறகு முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படமாக இருக்கிறது வேட்டையன். 


விமர்சனம்...


வேட்டையன் திரைப்படத்தை முதல் நாளில் பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தனர். சினிமா விமர்சகர்களும் இப்படம் ஓகே ரகமாக இருப்பதாக கூறினர். ரஜினியை இப்படத்தில் பார்க்க புதிதாக இருப்பதாகவும், அவர் இதே போல கதை நிறைய இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சிலர் கூறினர். படத்தில் பகத் பாசில்-ரஜினிகாந்தின் காம்போ நன்றாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியானது. இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், வேட்டையன் படத்தின் வசூல் அப்படியே டபுள் ஆகும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Vettaiyan Review: ரசிகர்களை ஏமாற்றியதா வேட்டையன் படம்? விமர்சனம், இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ