மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லை! ஏன் தெரியுமா?
Latest News Mookuthi Amman 2: சில நாட்களுக்கு முன்னர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
Latest News Mookuthi Amman 2: 2020ஆம் ஆண்டு வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படங்களுள் ஒன்று, மூக்குத்தி அம்மன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2 :
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கும், தெய்வம் சார்ந்த படங்களுக்கும் பஞ்சமே இல்லை. பழங்காலத்தில் சிவன், முருகன், பெருமாள், ராமன் என பல தெய்வங்களை வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பெண் தெய்வங்களை வைத்து வெகு சில படங்களே வெளிவந்திருக்கின்றன. அப்படி வெளிவந்த படங்களும் மொத்தமாக தெய்வம் சார்ந்தும், அந்த தெய்வத்தின் மகிமையை சார்ந்தும் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், சமூக பிரச்சனையை தெய்வத்தின் வழியே பேசும் படமாக வெளிவந்தது, மூக்குத்தி அம்மன்.
2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா அம்மன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹீரோவாக ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். சமூக பிரச்சனைகளை வைத்து, இவர் எழுதி இயக்கியிருந்த இந்த படத்தில், இவருடன் இணைந்து ஊர்வசி, அபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், மது மலைகொடி, இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோரும் மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமியும் நடித்திருந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த படம்..!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதையும் கதாப்பாத்திரங்களும் வித்தியாசமாக இருந்ததால், ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. காமெடியும் ஆங்காங்கே வர்க்-அவுட்டாக படம் மக்களின் ரீ-வாட்ச் லிஸ்டில் சேர்ந்தது. தியேட்டரில் ரிலீஸாக இருந்த இப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தனர். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இயக்கியிருந்தது.
மூக்குத்தி அம்மன் 2:
மூக்குத்தி அம்மன் படத்தின் அடுத்த மற்றும் இறுதி பாகம் வெளியாக இருக்கிறது. இதிலும், நயன்தாராதான் அம்மனாக நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில், நயன்தாரா நடிப்பதாக மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் இயக்குநர் யார்? ஹீரோ யார்? போன்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க | மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்.. மீண்டும் அம்மனாக மாறும் நயன்தாரா
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லையா?
ஆர்.ஜே.பாலாஜி, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் வெற்றி பெற்றதை தாெடர்ந்து இவர்களின் கூட்டணி தற்போது தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜியை கழற்றி விட்டுவிட்டு, வேறு இயக்குநரை வைத்து இவர்கள் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பளார்-இயக்குநர், நடிகருக்கு இடையேயான நல்ல உறவு ஐசரி கணேஷ்-ஆர்.ஜே.பாலாஜி இடையே இருந்தது. ஆனால், இப்போது இவர்கள் தனித்தனியே பிரிந்திருப்பதால் அந்த உறவில் விரிசல் விழுந்திருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.
மாசாணி அம்மன்:
சில மாதங்களுக்கு முன்னரே, ஆர்.ஜே.பாலாஜி மாசாணி அம்மன் எனும் படத்தின் வேலைகளில் பிசியாக இருப்பதாக கூறப்பட்டது. அந்த படத்தில் நயன்தாராவுக்கு பதில் த்ரிஷா அம்மனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானவுடன், அதற்கு போட்டியாக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Mookuthi Amman 2 : மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டைட்டில் லீக்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ