Sathyaraj About Periyar Atheism : தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக விளங்கும் சத்யராஜ், பெரியார் குறித்து நாத்திகம் குறித்தும் நகைச்சுவையாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது. திருச்சியில், இந்திய பகுத்தறிவாலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13வது மாநாடு நடைப்பெற்றது. இரண்டு நாட்களாக நடந்த இந்த மாநாட்டின் நிறைவு விழா நடைப்பெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது, அவர் பெரியார் குறித்தும் அவரது நாத்திகம் குறித்தும் பேசியிருக்கும் விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்யராஜ் பேச்சு:


பெரியாரை உலகமயமாக்குவோம், உலகை பெரியார் மயமாக்குவோம்.  பெரியார் மயமாக்குவோம் என்பது எல்லோரையும் புத்திசாலிகளாக்குவது தான்.  பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவை பெரியார் மயமாக்கி அடுத்த முறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.


குழந்தைகள் நாத்திகனாக தான் பிறக்கிறார்கள். அவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினர் அவர்கள் மத நம்பிக்கைகளை திணித்து குழந்தைகளை மதத்திற்குள் இறுக்கமாக்கி விடுகிறார்கள். மருந்து மாத்திரை உண்பவர்களுக்கு, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவர்களுக்கெல்லாம் நாத்திகர்கள் தான்.


பெரியார் சுயமாக சிந்தித்து வந்தவர். கோவிலில் உண்டியல் வைப்பது ஆத்திகம் அதில் பூட்டு போடுவது நாத்திகம் என பெரியார் கூறியுள்ளார். பேதங்களை உருவாக்கி ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி வைத்திருப்பது மிக பெரிய கொடுமை. வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்திய போது அங்கு சிலர் பெரியார் மரணிக்க வேண்டும் என யாகம் நடத்தினார்கள். ஆனால் அவ்வாறு நடத்தியதில் ஒருவர் இறந்தார், அதற்கு பெரியார் மகிழ வில்லை.


மேலும் படிக்க | தளபதி 69 : விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்த சத்யராஜ்!! காரணம் என்ன?


மனித குனத்தின் வேலையே இயற்கையை எதிர்த்து போராடுவது தான். மனிதராக பிறந்தவர்கள் அறிவியலை பயன்படுத்தி மனித சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். சினிமாவில் இறந்தது போல் நடித்தால் கேமராவை பார்த்து சிரிக்க சொல்வார்கள் அது ஒரு மூட நம்பிக்கை தான். என்னையும் அது போல் ஒரு முறை செய்ய சொன்னார்கள் நான் முடியாது என கூறிவிட்டேன்.


எந்த விதமான மூட நம்பிக்கையும் இல்லாத வாழ்க்கை தான் சுலபமான வாழ்க்கை. மனிதற்குள் ஏற்ற தாழ்வு இருக்க கூடாது, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் உள்ளிட்டவை தான் பெரியார் கொள்கை. நான் கடவுள் நம்பிக்கையாளனாக இருந்த போது தினமும் பல கோவில்களுக்கு சென்றுள்ளேன் அப்பொழுதெல்லாம் ஒரு விதமான மன அழுத்தம் இருந்தது. நான் நாத்திகனாக ஆன பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.


தனி மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தடையே மூட நம்பிக்கை தான். அதை தூக்கி எறிந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். தனி மனித மகிழ்ச்சிக்கும் சமூக மகிழ்ச்சிக்கும் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை இருந்தால் போதும் என்றார். தனிமனித மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது மூடநம்பிக்கைதான். எந்த விதமான மூட நம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் சுலபமாக இருக்கும். நான் நாத்திகனாக மாறிய பிறகு வாழ்க்கை மிகவும் ஜாலியாக இருக்கிறது. 


இவ்வாறு சத்யராஜ் அவ்விழாவில் பேசியிருக்கிறார். 


மேலும் படிக்க | Sathyaraj : மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்? அவரே சொன்ன பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ