Actor Silambarasan TR New Movie Announcement : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வரும் சிலம்பரசன், தனது அடுத்த பட பிராஜெக்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்புவின் முக்கிய அறிவிப்பு!


நடிகர் சிம்பு, இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது எக்ஸ் பக்கத்தில் “தம்+மன்மதன்+வல்லவன்+விண்ணைத்தாண்டி வருவாயா in GenZ மோட்=நம்ப நெக்ஸ்ட்!!” என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள், இது தங்கள் தலைவரின் கம்-பேக் காலம் என்று கூறி இணையத்தில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். 



இதையடுத்து நேற்று அவர் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டார் அதில், “டேய் 2k கிட்ஸ், 90ஸ் மூட்-ல நாளைக்கு ஷார்ப்-ஆஹ் 6.06க்கு வரேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 



இந்த அறிவிப்புகள் எல்லாம் படத்திற்காகவா? அல்லது புதிய பாடலுக்காகவா? என ரசிகர்கள் குழப்பத்திலும் குஷியிலும் இருந்த நிலையில் அவர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டிருக்கிறார். 



நடிகர் சிம்பு, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவடன் இணைந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். 2020ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய இவர், அதே படத்தை வெவ்வேறு மொழிகளிலும் இயக்கி ஹிட் ஆக்கினார். இதையடுத்து பிரதீப் ரங்கனாதனை வைத்து ‘டிராகன்’ எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இப்போது, சிலம்பரசனுடன் கைக்கோர்த்திருக்கிறார். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில், இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


பழையை லுக்:


தம் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்” பாடலில், கையில் கைக்குட்டை கட்டி ஒரு Symbol வைப்பார் சிம்பு. இப்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், சிம்புவின் கைகளில் கைக்குட்டை கட்டப்பட்டிருக்கிறது. கேப்ஷனில் “கட்டம் கட்டி கலக்குறோம்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இது, ரசிகர்களை சிம்புவை பழைய லுக்கில் பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.  


சிம்புவின் கம்-பேக்:


காதல் தோல்வி, நட்பில் தோல்வி, உடல் நலனில் தோல்வி, படத்தில் தோல்வி என கடந்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து தனது மார்கெட்டை இழந்து வந்தார் சிம்பு. உடல் எடை கூடியிருந்த அவர், படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை போன்ற பல காரணத்திற்காக ரெட் கார்ட் வாங்கினார். இதையடுத்து, கொரோனா காலத்தில் எடை குறைந்த அவர், ஈஸ்வரன் படத்தில் நடித்து தன்னால் பழைய சிம்புவாக வர முடியும் என்று நிரூபித்து காட்டினார். இதற்கடுத்து அவர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து  அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆனார். 


கமல்ஹாசனின் ராஜ்கமல் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், பட்ஜெட் பிரச்சனை காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து, அவர் கமலுடன் இணைந்து மணி ரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இதில், அவர் முக்கிய பாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் அந்த நடிகை?


மேலும் படிக்க | தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ