Vishal Condemns AV Raju Allegations On Trisha: அதிமுக முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் கூறியதை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷாலின் கண்டனம்:


நடிகர் விஷால் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:



“ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞரை பற்றி  மிகவும் கேவலமாக பேசியதை சமூக வலைதளங்களில் நாம் பார்த்தோம்.  அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார் என்பதற்க்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பர படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள். 


மேலும் உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை எண்ணி வேதனை அடைகிறேன். 


இப்படி கீழ் தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக  நல்ல திட்டடங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான். இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை,  சக கலைஞனாகவும், பெண்களை இழிவு படுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
உங்களின் அறிவற்ற செயலினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேளை புரியவில்லை என்றால்  உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள குறைந்த பட்சம் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடமாவது  கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்” என்று விஷால் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க | Trisha: ‘அருவருப்பா இருக்கு..’ கூவத்தூர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! ட்வீட் இதோ..


த்ரிஷா குறித்த சர்ச்சை:


உட்கட்சி பூசல் காரணமாக, அதிமுக முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது, கூவத்தூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் த்ரிஷாவுடன் இருந்ததாகவும், இதற்காக ரூ25 லட்சம் கொடுத்து அவர் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து, நடிகை த்ரிஷா நேற்று இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இனி எதாக இருந்தாலும், தனது சட்ட ஆலோசகர்களிடம் பேசிக்கொள்ளுமாறும் கூறினார்.


இதையடுத்து, ஏ.வி.ராஜு நேற்று ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், தான் த்ரிஷா பற்றியே அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசவில்லை என்றும், அவர் மனம் புண்பட்டிருந்தால் தன்னை மன்னித்து விடுமாறும் கூறினார். தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் யாரோ இது போன்று சித்தரித்து வீடியோ வெளியிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சர்ச்சை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் ஏ.வி.ராஜுவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க | கூவத்தூருக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன 25 லட்சம்? முழு விவரம் இங்கே..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ