Amaran Sivakarthikeyan Sai Pallavi Salary : உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், அமரன். 2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் குறித்தும், இதற்காக நடிகர்-நடிகைகள் வாங்கிய சம்பள விவரம் குறித்தும் இங்கு பார்ப்போம்.


அமரன் திரைப்படம் :

 

இதுவரை, காமெடி-குடும்ப திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் படம்தான், அமரன். 2014ஆம் ஆண்டு காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் மக்களை காக்க தன்னுயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அமரன் படத்தில், ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு மனைவியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். 

 

அமரன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இப்படத்தில் நடித்தவர்கள் குறித்தும், அவர்கள் இதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கின்றனர் குறித்தும் இங்கு பார்ப்போம். 

 

சிவகார்த்திகேயன் சம்பளம்:

 

தாெகுப்பாளராக இருந்து நடிகராக மாறிய சிவகார்த்திகேயன், தற்போது டாப் ஸ்டார்களுள் ஒருவராக திகழ்கிறார். துணை கதாப்பாத்திரத்தில் ஆரம்பித்து, இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் இவர், அமரன் திரைப்படத்திற்காக தனது உடலை நன்றாக டிரெயின் செய்து கட்டுமஸ்தான ஆளாக மாறினார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர், சுமார் ரூ.30 கோடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் படங்களில் நடிக்க, அவர் ரூ.15-20 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்ததாகவும் இப்போது அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 


 

சாய் பல்லவி சம்பளம்:

 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், சாய் பல்லவி. பிரேமம் படம் மூலம் பிரபலமான இவர், முதன்முதலில் தாம்தூம் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக வந்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ், மலையாளம் என மாறி மாறி பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாக நடித்திருக்கிறார் என்றால், சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வாழ்ந்தே இருக்கிறார். படம் முழுக்க, ராணுவத்தில் போர்புரியும் கணவனை பிரிந்து வாழும் மனைவியாக தனது அசத்தலான நடிப்பை காட்டியிருக்கிறார். சொல்லப்போனால் சிவகார்த்திகேயனை விட, சாய் பல்லவியின் நடிப்புக்குத்தான் நல்ல வரவேற்பை மக்கள் கொடுத்திருக்கின்றனர். 

 

இந்த படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி ரூ. 2.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பள வேறுபாட்டை பார்த்தவர்கள், ஏன் இவ்வளவு பெரிய கேப் என கேட்டு வருகின்றனர்.

 

படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன?

 

அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறுவதற்கு பல காரணங்கள் அமைந்திருக்கிறது. உண்மைக்கதை என்பதை தாண்டி, படம் மிகவும் வேகமாக இருப்பது, வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி, அனைவரது நடிப்பும் படத்திறக்கு பெரும் பலமாக ஆகியிருக்கிறது. 

 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ