பிரியங்கா vs மணிமேகலை பிரச்சனை.. சண்டை போட்ட ஆடியோ லீக்! நடந்தது என்ன?
Manimegalai Priyanka Deshpande Fight Audio Leaked : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
Manimegalai Priyanka Deshpande Fight Audio Leaked : தமிழ் தாெலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக விளங்குகிறது, ‘குக் வித் கோமாளி’. 2020ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. எப்போதும் போல அல்லாமல், இந்த முறை இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெற்றிருந்தன.
குக் வித் கோமாளி 5 மாற்றங்கள்:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, 4வது சீசன் வரை, ஒரு பிரபல நிறுவனம் நடத்தி வந்தது. இடையில் ஏற்பட்ட ஏதோ ஒரு சலசலப்பு காரணமாக இந்நிகழ்ச்சியை இனி நடத்த முடியாது என அந்நிறுவனம் கூறிவிட்டது. அதே போல, இதில் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இவருக்கு பதில், மாதம்பட்டி ரங்கராஜ் இன்னொரு நடுவராக வந்தார். புதிய காேமாளிகள் வந்திறங்கிய நிலையில், சில சீசன்களுக்கு முன்பு கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த முறை ரக்ஷனுடன் தொகுப்பாளராக வந்தார். இதற்கு நடுவே, இந்த சீசனின் ஆரம்பத்தில் கோமாளியாக வந்தவர்களும் இனி தான் இந்த நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை என்ற பதிவையும் வெளியிட்டனர்.
பிரியங்கா Vs மணிமேகலை..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில், முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் பிரியங்கா. ஸ்டார் தாெகுப்பாளரான இவர், ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், குக் வித் கோமாளியில் இவர் ஒரு போட்டியாளர் மட்டுமே. இந்த நிலையில், மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டார். அதில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாகவும் இந்த சீசன் குக்-ஆக வந்த ஒரு தொகுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் தனது சுய மரியாதையை விட்டுக்கொடுக்க தயங்காததால், இந்த சீசனில் இருந்து விலகுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“தேவையில்லாமல் பேசும் வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்..” என்று கூறும் மணிமேகலை, தொடர்ந்து தனக்கு டிஸ்டர்ப் ஆவதாகவும், எதற்கு கத்தி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்றும் பிரியங்காவை கேட்கிறார். அப்படியே இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போகிறது.
இந்த ஆடியோ உண்மைதான் என்று ஒரு சிலர் கூற, இன்னும் சிலர் இது பிக்பாஸில் பிரியங்கா போட்டியாளராக இருந்த போடு பேசிய ஆடியோவையும், மணிமேகலை பிராங்க் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஆடியோவையும் சேர்த்து எடிட் செய்யப்பட்டது என்று கூறி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
என்னதான் பிரச்சனை?
மணிமேகலை, கடைசி எபிசோடில் பாதியில் இருந்து காணவில்லை. இதையடுத்துதான் அவர் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பதிவை வெளியிட்டார். இதையடுத்து, வெளியிட்டிருந்த வீடியோவில், ஆரம்பத்தில் இருந்து தான் இருந்த கடைசி நாள் வரை, ஒரு தொகுப்பாளர் தனது பணிகளில் தலையிட்டு தனக்கு எதுவும் தெரியாது என்பது போல காண்பித்ததாகவும், இதை ஓரளவிற்கு மேல் தன்னால் சமாளிக்க முடியாது என்று தோன்றியதால் இதிலிருந்து விலகியதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ