விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட கன்டீஷன்! என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil Rules For Vijay Sethupathi : நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மாறியிருப்பதை தொடர்ந்து, அவருக்கு அந்நிகழ்ச்சி சார்பாக ஒரு கண்டீஷன் போடப்பட்டுள்ளதாம். அது என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil Rules For Vijay Sethupathi : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இந்த சீசனில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்தார். இதையடுத்து, விஜய் சேதுபதி புது ஹோஸ்ட் ஆக களமிறங்கினார்.
விஜய் சேதுபதி:
திரையுலகிற்கு வந்த புதிதில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இவர், தற்போது பான்-இந்திய ஹீரோவாக இருக்கிறார். ஒரு படத்தில் விளையாட்டுத்தனமாக வில்லனாக நடித்த அவர், அதுவே செட் ஆனதால் அப்படியே தொடர்ந்து வில்லனாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனுக்கு கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி வருகிறார் என்பதை தெரிந்தவுடன் மக்கள் பலரும் “இவர் எப்படி கமல் இடத்தை எப்படி நிரப்புவாரோ?” என்று கேள்வி எழுப்பி வந்தனர். அப்படி கேள்வி கேட்டவர்கள் அனைவரின் வாய்களையும் அடைக்கும் அளவிற்கு முதல் எபிசோடில் சிக்ஸர் அடித்தார், விஜய் சேதுபதி.
மாஸ் காட்டிய புது தொகுப்பாளர்..!
போட்டியாளர் ரஞ்சித்தை கலாய்த்ததில் இருந்து, தன்னம்பிக்கை இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் மோட்டிவேஷனலாக பேசுவதை வரை, அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தார். கமல்ஹாசன் பிக்பாஸை தொகுத்து வழங்கிய போது, பலருக்கு அவர் பேசிய கருத்துகள் புரியாமலும் உடன்பாடில்லாமலும் இருந்தது. ஆனால், விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது, நமக்கு தெரிந்தவர் அந்த மேடையில் நிற்பது போல இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!
பிக்பாஸ் போட்ட கன்டீஷன்..
பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரும் போட்டியாளர்கள் அனைவருக்குமே, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நிபந்தனைகளை வைப்பர். என்னென்ன விஷயங்களை பேச வேண்டும், எதை பேசக்கூடாது, எந்தெந்த பொருட்களை மட்டும் உள்ளே எடுத்த செல்ல வேண்டும், வீட்டிற்குள் நடக்கும் விஷயங்களில் எதையெல்லாம் வெளியில் சாெல்லலாம், எதை சாெல்லக்கூடாது என்று பல விதிமுறைகள் இருக்கின்றன. இதே போல, தொகுப்பாளராக இருப்பவர்களுக்கும் சில கன்டீஷன்கள் இருக்கிறது. அந்த வகையில், விஜய் சேதுபதிக்கு ஒரு நிபந்தனை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் விதித்துள்ளார்களாம்.
விஜய் சேதுபதி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களுள் ஒருவர். தன் படங்கள் மட்டுமல்லாது, பிற சிறிய பட்ஜெட் படங்கள், சினிமாவில் வளர்ந்து வருபவர்களின் படங்கள் என அனைத்திற்கும் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ப்ரமோஷன் செய்வார். அவர்களின் படங்களின் போஸ்டர்களை ஷேர் செய்வார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளரான பிறகு அப்படி எதுவும் செய்க்கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டிருக்கிறதாம். காரணம், விஜய் சேதுபதி பிக்பாஸிற்கு வந்து விட்டதால், மக்கள் அவரை பற்றிய விஷயங்களை கேள்வி பட்டாலே பிக்பாஸுடன் கனெக்ட் செய்து விடுவராம்.
எனவே, விஜய் சேதுபதியின் ஆடியன்ஸின் கவனமும் முழுமையாக பிக்பாஸின் மீது இருக்க வேண்டும் என்பதால் இப்படியொரு விதிமுறையாம். இது திரை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலே அன்றி, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த தகவலை போலவே, விஜய் சேதுபதியும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து தன் சமூக வலைதள பக்கத்தில் எந்த படத்தையும் ப்ரமோஷன் செய்யாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு? ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ