Latest News Madha Gaja Raja Release : தமிழ் திரையுலகில் ‘புரட்சி தளபதி’ எனும் பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் விஷால். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமன்றி வசூலையும் பயங்கரமாக ஈட்டியிருக்கிறது. இந்த நிலையில், இவர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்த மத கஜ ராஜா படம் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத கஜ ராஜா:


தமிழ் திரையுலகின் மசாலா பட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர், சுந்தர்.சி. இவர், 2013ஆம் ஆண்டு இயக்கி முடித்த படம், மத கஜ ராஜா. இந்த படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில், விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலக்‌ஷ்மி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக இடம் பெற்றிருந்தனர். 


2012ஆம் ஆண்டு தொடங்கிய இதன் படப்பிடிப்பு 2013ஆம் ஆண்டில்தான் முடிவடைந்தது. முழுமையாக எடுத்து முடித்த ஒரு படம் திரைக்கு வராமல் இருப்பது புதிய விஷயமல்ல என்றாலும், ஒரு ஹிட் கூட்டணியின் படம் வெளியாகாமல் இருப்பது இதுவே முதன்முறையாகும். 


மேலும் படிக்க | சுந்தர்.சி தொடர்ந்து பேய் படங்களை இயக்க காரணம் என்ன? குஷ்பு சொன்ன பதில்..


விஜய் ஆண்டனி இசை..


இப்போது ஹீரோவாக கலக்கி வரும் விஜய் ஆண்டனி, 2012ஆம் ஆண்டில் மத கஜ ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இருந்து வெளியான ‘மை டியர் லவ்வரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி வைரலானது. ஆனால், பாடல் வெளியானதே தவிர, படம் வெளியாகவே இல்லை. இந்த படத்தில் சோனு சூட், நிதின் சத்யா, சந்தானம், ராஜேந்திரன், சடகோபன் ரமேஷ், சுப்புராஜு, மனோபாலா, சிட்டி பாபு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்யா மற்றும் சதா ஆகியோர் கெளரவ தோற்றத்திலும் நடித்தனர். ஆனால், இப்படம் ஒரு சில பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமலேயே இருந்து வந்தது. இதற்கு பட தயாரிப்பு நிறுவனத்தின் நிதி இழப்பும் ஒரு பெரிய காரணமாக சொல்லப்பட்டது. 


11 ஆண்டுகள் கழித்து ரிலீஸ்?


சுந்தர்.சி, மத கஜ ராஜா படத்திற்கு பிறகு இன்னும் பல படங்களை இயக்கவும், அவற்றில் நடிக்கவும் ஆரம்பித்தார். சமீபத்தில் அவரது அரண்மனை 4 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், இப்போது மத கஜா ராஜா திரைப்படம் 11 ஆண்டுகள் கழித்து ரிலீஸாக இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி, வரும் ஆகஸ்டு மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள் - விஷால் ஆவேசம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ