Latest Big Tamil Movies Releasing On OTT : ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால், திரையரங்குளில் வெளியாகும் பெரிய திரைப்படங்களும் கூட வெகு சில நாட்களிலேயே ஓடிடியில் வெளியாக ஆரம்பித்து விட்டது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். அந்த வகையில், வரும் நாட்களில் ஓடிடியில் வெளியாக இருக்கும் பெரிய படங்களின் லிஸ்டை, இங்கு பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெய்யழகன்:


கார்த்தி-அரவிந்த் சாமி நடிப்பில், செப்டம்பர் 27ஆம் தேதி உருவான திரைப்படம், மெய்யழகன். இந்த திரைப்படத்தை 96 பட புகழ் பிரேம் குமார் இயக்கியிருந்தார். திரையரங்குகளில் வெளியான போது, இப்படத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்தது. 



வேலைக்காக, சொந்த ஊரை விட்டு விட்டு சென்னை வந்து இருப்பவர்களின் ஏக்கத்தை பிரதீபலிக்கும் படமாக இருந்தது, மெய்யழகன். இதில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம், வரும் 25ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.


தங்கலான்:


2024ல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டிய திரைப்படங்களுள் ஒன்று, தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படம், கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதாலோ என்னவோ, வெளியான முதல் நாளிலேயே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. 



தங்கலான், உலகளவில் சுமார் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விகரம், பார்வதி திருவோது, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் 31ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | வேட்டையன் படம் ‘இந்த’ ஓடிடியில் வெளியாகும்! எந்த தளம் தெரியுமா?


தேவாரா:


ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம், தேவாரா பாகம் 1. இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். இது, அவரது முதல் தென்னிந்திய திரைப்படம் ஆகும். இந்த படம், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியானது.



தேவாரா படம், ரிலீஸான முதல் நாளிலேயே சுமார் ரூ.172 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்பட்டது. தமிழகத்திலும் இப்படத்திற்கு ஓரளவிற்கு நலல் வரவேற்பு இருந்தது. இந்த படம், வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது .


வேட்டையன்:


டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், கடந்த 10ஆம் தேதி வெளியான படம், வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நாயகி மஞ்சு வாரியர் நடித்திருந்தார். துஷாரா விஜயன், பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர்.



இந்த படம், தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனை, வரும் நவம்பர் மாதம் 3ஆம் வாரத்திற்கு பிறகு அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | OTT Release : ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகும் 30 படங்கள்!! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ