இன்றைய எபிசோட்: கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி!
![இன்றைய எபிசோட்: கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! இன்றைய எபிசோட்: கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/12/26/462083-karthigai-deepam-tamil.jpg?itok=iOT1Sdgi)
Karthigai Deepam Today Episode: கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி, நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Serial Karthigai Deepam Latest News: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி மகேஷை ரிலீஸ் செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சிவனாண்டி மகேஷிடம் நீ அந்த சாமுண்டீஸ்வரி வீட்ல இருக்கணும்.. இப்போ நிச்சயதார்த்தத்துக்கு போய் போன் பேச போயிருந்தேன் அங்க மயங்கி விழுந்துட்டேன் என்று சொல்லு என சொல்கிறான்.
உடனே மாயா மயங்கி விழுந்ததற்கு காரணம் கார்த்திக் தான் என்று அவன் மீது பழி போட சொல்கிறாள். கார்த்திக் நிறைய குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டான். அவனை அந்த வீட்ல இருந்து விரட்டணும் என சொல்கிறாள்.
அதைத் தொடர்ந்து மாயா மற்றும் மகிழ்ச்சி என இருவரும் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். போன் பேச போயிருந்த இடத்தில் கார்த்திக் தன்னை மயங்க வைத்து விட்டதாக சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதே நேரத்தில் சந்திரகலா எதுக்கு இப்படி சொல்கிறான் என குழப்பம் அடைகிறாள்.
அடுத்து சாமுண்டீஸ்வரி மகேஷ் சொன்னதைக் கேட்டு கார்த்திக்கிடம் கோபப்படுகிறாள். ஆனால் ரேவதி கார்த்திக் அப்படி செய்யற ஆள் கிடையாது என அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். இருந்தாலும் சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள்.
ஆனால் கார்த்திக் தீர விசாரிக்காமல் இப்படி முடிவெடுக்காதீங்க என சொல்வதோடு உண்மையை நிரூபிக்க கால அவகாசம் கேட்க சாமுண்டீஸ்வரி ஒரு மாசம் அவகாசம் கொடுக்கிறாள். ஒரு மாசத்துக்குள் உண்மையை நிரூபிக்க தவறினால் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கண்டிஷன் போடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ