நார்மல் வில்லனா..? கொடூர வில்லனா..? லியோ படத்தில் அர்ஜூனின் கதாப்பாத்திரம் இதுதான்!
Harold Das: லியோ படத்தில் அர்ஜுனின் கதாப்பாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹரால்ட் தாஸ்:
நடிகர் அர்ஜுன், லியோ படத்தில் ஹரால்ட் தாஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்று அர்ஜுனின் பிறந்தநாள். இதனால், அவரது கதாப்பாத்திரம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அர்ஜுன் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். சுமார் 41 விநாடிகளுக்கு வெளியாகியுள்ள அந்த வீடியோவில் அர்ஜுன் ஏதோ ஒரு பெரிய கேங்ஸ்டர் போலவும் அவர் விக்ரம் பட ரோலக்ஸ் போல யார் கழுத்தையோ வெட்டுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | குண்டானதால் நடிகைக்கு நேர்ந்த துயரம்! அய்யய்யோ..இவருக்கு இந்த நிலையா..?
ரோலக்ஸின் தந்தை..?
கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் கடைசியில் வரும் கதாப்பாத்திரம், ரோலக்ஸ். இந்த கதாப்பாத்திரத்திற்கு படம் முழுவதும் ஹைப் கொடுக்கப்பட்டது. படத்தில் மெயின் வில்லனாக பார்க்கப்பட்ட சந்தனம் (விஜய் சேதுபதி) ரோலக்ஸிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தால் பயந்து நடுங்குவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கடைசி 10 நிமிடங்களில்தான் இந்த கதாப்பாத்திரமே ரசிகர்களுக்கு காண்பிக்கப்படும். இதில் ரோலக்ஸாக நடித்திருந்த சூர்யா, ஒருவரின் தலையை டிரம்மின் மீது வைத்து துண்டாக வைத்திருப்பது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அதே போன்ற காட்சி, தற்போது லியோ படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதில் நடிகர் அர்ஜுன்தான் ஒருவரின் தலையை வெட்டுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இவர் ஒருவேளை ரோலக்ஸின் அப்பாவாக இருப்பாரோ என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.
எல்.சி.யுவில் படம் இருக்கிறதா இல்லையா..?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களை வைத்து ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்ற பெயரில் ஒரு யூனிவர்ஸை உருவாக்கினார். இதில் இன்னும் விக்ரம் 2, கைதி 2 உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ளன. இதையடுத்து அவர் இயக்கியுள்ள லியோ திரைப்படமும் எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து, கைதி படத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு அவர் லாவகமாக பதில் அளித்தார். இதனால், லியோ படம் எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் சுற்றி வருகின்றனர். படம் வெளியாகும் வரை அதை சர்ப்ரைஸாக வைத்திருக்க லோகேஷும் அவரது படக்குழுவும் ப்ளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களே உள்ளன..
லியோ படம் வெளியாவதற்கு இன்னும் 67 நாட்களே உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் பதிவு ஒன்றை வெளியிட்டது. கடந்த 13ஆம் தேதியன்று யாரும் எதிர்பாராத விதமாக இந்த அறிவிப்பினை லியோ படக்குழு வெளியிட்டிருந்தது. லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் அதி வேகத்தில் நடைப்பெற்று வருகின்றன. படம், வரும் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ‘போர் தொழில்’ 2ஆம் பாகம் தயாராகுமா..? படத்தின் நாயகன் சொன்ன தகவல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ