லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், ஜோஜு ஜார்ஜ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.  படத்தின் பணிகள் மீண்டும் மே மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையிலுள்ள ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது நடைபெறவுள்ள படப்பிடிப்பில் விஜய் மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மற்றும் விஜய்-சஞ்சய் தத் ஆகியோருக்கு இடையேயான ஒரு பெரிய சண்டைக் காட்சி போன்றவை படம்பிடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 2 டிவிட்டர் ரியாக்ஷன்: ’செம டிவிஸ்ட் ... செம மாஸ்’ ரசிகர்களின் பர்ஸ்ட் ரியாக்ஷன்



'லியோ' படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பது பற்றி தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு முக்கியமான நபர் இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் நடிக்கப்போகும் அந்த முக்கியமான நபர் யார் என்று யாராலும் யூகிக்கவே முடியாது, அப்படிப்பட்ட ஒரு நபர் தான் 'லியோ' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக நடிக்கிறார்.  அந்த முக்கியமான நபர் யாரென்றால் காட்டுக்கே ராஜாவான சிங்கம் தான், விஜய்க்கு அடுத்தபடியாக இந்த சிங்கம் தான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.  காட்டுக்கு ராஜாவான இந்த சிங்கத்தை உயிர்ப்பிக்கும் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த கிராஃபிக்ஸ் பணிக்காக படக்குழு ரூ.15 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 'லியோ' படம் அக்டோபர் 19-ம் தேதி முதல் உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது.  இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருக்கிறார்.  மேலும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அல்லாமல் சென்னைக்கு வெளியே உள்ள நகரங்களில் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.  இந்த ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தளபதி விஜய் எதைப்பற்றி பேசுவார்? என்ன பேசுவார் என்பதை கேட்கவே பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.  'லியோ' படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பார் சில செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  


சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விஜய் இதுவரை லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, மற்றும்  ஜில்லா போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கப்போவதாக கூடுதல் செய்திகள் வெளியாகியுள்ளது.  விஜய்யின் புதிய படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டாலும், இயக்குனர் யார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.  'லியோ' படத்தின் பணிகள் முடிந்த கையோடு நடிகர் விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!