New Movies: இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகவுள்ள புது திரைப்படங்கள்!
OTT New Movies: இந்த மே மாதத்தின் கொளுத்தும் வெயிலை குளுமையாக்க செய்யும் வகையில் சில திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.
1) தெய்வ மச்சான் - மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவான இப்படம் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு மே 26 அன்று 'சிம்ப்லி சவுத்' தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் அனிதா சம்பத், தீபா ஷங்கர் பாண்டியராஜன், பால சரவணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
2) பூ - விஜய் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், மோனிகா ரெபா ஜான், விஸ்வக் சென், வித்யு ராமன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாரர் த்ரில்லர் படம் மே 27 அன்று ஜியோ சினிமாவில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகவிருக்கிறது.
3) பச்சுவும் அத்புத விளக்கும் - அகில் சத்யன் இயக்கத்தில் புகழ்பெற்ற மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் மலையாள மொழியில் வெளியான நகைச்சுவையான இந்த படம் மே 26 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது. இப்படத்தில் அஞ்சனா ஜெயபிரகாஷ், முகேஷ், வினீத், திவானி ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
4) பேடியா - அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த ஹாரர் காமெடி திரைப்படம் ஜியோ சினிமாவில் மே 26 அன்று வெளியாகிறது. விஜய்யின் ஹாரர் காமெடி யூனிவர்ஸின் கீழ் வெளியான மூன்றாவது படம் இதுவாகும்.
5) சர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை - அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவான இப்படம் மே 23 அன்று ஜீ5 தளத்தில் வெளியானது. நீதிமன்றத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது.
6) கிசி கா பாய் கிசி கி ஜான் - தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் அதிகாரபூர்வ ஹிந்தி ரீமேக் தான் இந்த படம். ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் உருவான இந்த படம் மே 26 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
7) பாரத சர்க்கஸ் - சோஹன் சீனுலால் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ மற்றும் பினு பப்பு ஆகியோரது நடிப்பில் உருவாகி, விமர்சன ரீதியாக நல்ல பாராட்டை பெற்ற இந்த த்ரில்லர் திரைபபடம் மே 26 அன்று சிம்ப்லி சவுத் தளத்தில் வெளியாகிறது.
8) ஜான் விக் சேப்டர் 4 - கீனு ரீவ்ஸ் நடிப்பில் ஆங்கில மொழியில் உருவான இந்த திரைப்படம் மே 23 அன்று லயன்ஸ்கேட் பிளேயில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
9) ஃபுபார் - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் நடிப்பில் ஆங்கில மொழியில் வெளியான இந்த நகைச்சுவை கலந்த அதிரடி திரைபபடம் மே 25 அன்று நெட்ப்ளிக்சில் வெளியாகிறது.
10) ஹார்ட் ஃபீலிங்ஸ் - ஜெர்மன் மொழியில் உருவான இந்த நகைச்சுவைத் திரைப்படம் மே 24 அன்று நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
11) மதர்ஸ் டே - போலிஷ் மொழியில் உருவான இந்த மர்ம த்ரில்லர் திரைபபடம் மே 24 அன்று நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
12) டின் அண்ட் டினா - ஸ்பானிஷ் மொழியில் உருவான இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் மே 26 அன்று நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
13) சதி கனி ரெண்டு ஏகரலு - தெலுங்கு மொழியில் உருவான இந்த திரைப்படம் ஆஹா வீடியோவில் மே 26 அன்று வெளியாகிறது.
14) வேர் தி ட்ராக் எண்ட்ஸ் - ஸ்பானிஷ் மொழியில் உருவான இந்த நகைச்சுவை திரைபபடம் மே 26 அன்று நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
15) தி லைட் இன் யுவர் ஐஸ் - இந்த கொரியன் மொழி தொடர் மே 24 அன்று MX பிளேயரில் வெளியாகிறது.
16) கிராக் டவுன் சீசன் 2 - ஹிந்தி மொழியில் உருவான இந்த அதிரடி தொடர் மே 25 அன்று ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
17) ப்ளட் & கோல்ட் - இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் எடுக்கப்பட்ட நகைச்சுவை கலந்த இந்த ஜெர்மன் மொழி திரைபபடம் மே 26 அன்று நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
18) டர்ன் ஆஃப் தி டைட் - போர்ச்சுகீசிய மொழியில் உருவான இந்த புதிய அதிரடி திரில்லர் தொடர் மே 26 அன்று நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது.
19) சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் சீசன் 3 - ஹிந்தி மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த மர்ம த்ரில்லர் தொடர் மே 26 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
20) இண்டர்ட்வைன்ட் சீசன் 2 - நகைச்சுவையான இந்த ஆங்கில தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மே 24 அன்று வெளியாகிறது.
21) மிஸ்ஸிங் - திரையரங்கு வெளியீட்டுக்கு பின்னர் தற்போது இந்த த்ரில்லிங்கான ஆங்கில மொழி திரைப்படம் மே 20 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ