Jawan Pre Release Event LIVE: விஜய் சேதுபதிக்கு பதிலடி கொடுத்த ஷாருக்கான்

Wed, 30 Aug 2023-9:12 pm,

Jawan Pre Release Event LIVE: ஜவான் பட விழா இன்று சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. அங்கு நடப்பவை என்னென்ன? இங்கே லைவ் அப்டேட்ஸ்களை காணலாம்.

Jawan Pre Release Event LIVE Updates: ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஜவான். இந்த படத்தை அட்லீ குமார் இயக்கியுள்ளார். நயன்தாரா படத்தின் நாயகியாக நடிக்க விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக வருகிறார். ஜவான் பட விழா, இன்று சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. இதற்கு பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 



நடிகர் ஷாருக்கான் சில நிமிடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அவருக்கு மக்கள் கோலாகலமாக வரவேற்பு அளித்தனர். 

Latest Updates

  • விஜய் சேதுபதிக்கு நகைச்சுவையாக பதிலடி கொடுத்த ஷாருக்கான்
    நீங்கள் என்னை பழி வாங்கலாம்; ஆனால் எனது ரசிகர்களை என்னிடம் இருந்து வாங்க முடியாது: ஷாருக்கான்

  • தமிழில் பேசிய ஷாருக்கான்
    டான்ஸ் மாஸ்டரான ஷோபியிடம் கடினமான ஸ்டெப்ஸ் எனக்கு தரவேண்டாம், தளபதி போல எனக்கு டான்ஸ் வராது என கூறி இருந்தேன். அனிருத் என்னுடைய பேபி. எனது குழந்தைகள் போல தான் அவரும். மரண மாஸ் அட்லீ தேங்க்யூ சோ மச்....ஒளிமயமான விஷ்ணு தேங்க்யூ சோ மச்... தமிழ்நாட்டின் சாப்பாடு செம. இதனால் எனது சிக்ஸ் பேக்கை இழந்து விட்டேன். எனக்கு தொப்பை போட்டு விட்டது” என கலகலப்பாக பேசி அரங்கையே அதிர வைத்தார் நடிகர் ஷாருக்கான்

  • ஜவானில்  வில்லனாக நடித்த விஜய்சேதுபதி செம பன்ச்

  • Jawan audio launch live updates:  ஜிந்தா பந்தாவில் அனிருத் மற்றும் ஷாருக்கானின் அசத்தல் பர்ஃபார்மன்ஸ்

  • Jawan audio launch live updates:  ஜவான் படம் உருவாக தளபதி விஜய் தான் முக்கிய காரணம்: அட்லீ பேச்சு

  • வீடியோ மூலம் வாழ்த்திய உலக நாயகன்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜவான் படக்குழுவிற்கு நடிகர் கமல்ஹாசன் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

  • ‘ஷாருக்கான் என்னிடம் தினமும் வீடியோ காலில் பேசுவார்..’

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஷாருக்கான் ஜவான் படக்குழுவினரை குடும்பத்தினர் போல நடத்துவதாக அனிருத் பேசியுள்ளார். 

    மேலும், அவர் தாங்கள் தினமும் வீடியோ காலில் பேசுவதாகவும் அவர் லண்டன் செல்லும் போது தனக்கு டி-ஷர்ட் வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

  • “அடுத்து அட்லி ஹாலிவுட் போவார்!”

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜவான் படத்தில் நடித்துள்ள யோகி பாபு, அடுத்து அட்லீ ஹாலிவுட்டிற்கு போவார் என பட விழாவில் தெரிவித்துள்ளார். 

    அவர் ஹாலிவுட்டிற்கு போனால் தன்னையும், வி.டி.வி கணேஷையும் கூட்டிக்கொண்டு போவார் என்றும் அங்கு சென்று நாங்கள் அர்னால்டை டார்சர் செய்வோம் என்று கூறியுள்ளார். 

  • பிரியாமணியுடன் நடனமாடிய ஷாருக்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நடிகை பிரியாமணியுடன் ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் பாடலுக்காக நடனமாடினார். 

    இது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

  • பாலிவுட்டிற்குள் களமிறங்கிய தமிழ் பாடலாசிரியர்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜவான் படத்தின் பாடல்கள் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளதாக பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார். 

    இதன் மூலம் அவர் பாலிவுட்டிற்குள் முதன் முதலாக கால் பதிக்கிறார். 

  • அனிருத்திற்கு முத்தம் கொடுத்த ஷாருக்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜவான் திரைப்பட விழாவில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தை கட்டிப்பிடித்து ஷாருக்கான் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். 

    இந்த போட்டோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

  • ஜவான் பட விழாவிற்கு விஜய் சேதுபதி வருகை!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜவான் படத்தின் வில்லன் நடிகர் விஜய் சேதுபதி, விழா நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

    அவர் வருகை தந்த வீடியோவை ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

  • ஜவான் பட விழாவில், விஜய் ரசிகர்கள் ‘லியோ..லியோ’ என சத்தம் போட ஆரம்பித்துள்ளனர். 

    இந்த தகவலை ஒரு ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

  • “எப்போ வருவீங்க தலைவா..?”

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜவான் பட விழா அரங்கிள், ஷாருக்கானின் வருகைக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

    ஷாருக்கானை மேடையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர், 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link