கைதி 2 குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
kaithi 2 Update: லோகேஷ் கனகராஜின் 2வது படமான கைதி வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி, அக்டோபர் 25, 2019 அன்று வெளியாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான கைதி ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு தனி பெயரை இந்த படம் பெற்று தந்தது. கைதி படத்திற்கு பிறகே, லோகேஷ் மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை இயக்கினார். 2022 ஆம் ஆண்டில், கைதியின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் அந்த சயமத்தில் கூறி இருந்தார். இருப்பினும், மற்ற பட வேலைகள் காரணமாக கைதி 2 படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கைதி படம் வெளியாகி 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் கைதி படத்தின் வீடியோவை பகிர்ந்து இருந்தது.
மேலும் படிக்க | ஜெய் - அருண்ராஜா கூட்டணியில் லேபிள் வெப் சீரிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
கைதி படத்தின் மேக்கிங் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்பதை கூறி இருந்தது. டில்லி மீண்டும் வருவதாக வீடியோவில் இடம் பெற்றிருந்தது. கைதி 2, ரோலக்ஸ் மற்றும் விக்ரம் 2 ஆகியவை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்த வரவிருக்கும் திரைப்படங்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறி இருந்தார். விக்ரம் 2 படம் எல்சியூவில் கடைசிப் படமாக இருக்கும் என்றும் லோகேஷ் தெரிவித்தார். லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் LCUவில் ஒரு பகுதியாக உள்ளது.
'லியோ' திரைப்படத்தின் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் வசூல் அனைவரையும் வாய்பிளக்க செய்துள்ளது. உலகம் முழுவதும் முதல் வாரத்தில் இப்படம் ரூ.461 கோடியை வசூல் செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி வியாழன் அன்று வெளியான இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். ஒரு தமிழ்ப் படத்துக்கு முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்து வசூலை அள்ளிய நிலையில், 'லியோ' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. விஜய் நடித்த இப்படம் 1 வாரத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உள்ளது.
விஜய்யின் லியோ திரைப்படம் எளிதாக 500 கோடியை தொட வாய்ப்புள்ளது. நேற்று வியாழக்கிழமை வேலை நாள் என்பதால் படத்தின் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் குறைவான டிக்கெட் விற்பனையை எதிர்கொண்டன. இருப்பினும், வரும் வார இறுதியில் மீண்டும் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், லியோ ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ ஏற்கனவே பல இடங்களில் அதிக வசூல் செய்து லாபம் பெற்று தந்துள்ளது. மேலும் இந்த வாரம் தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் லியோ படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக அமைந்துள்ளது. லோகேஷ் அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்த படம் LCUல் வராது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | லியோவில் விஜய்யுடன் நடித்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? ‘இந்த’ நடிகரின் மகள்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ