தளபதி 67 அறிவிப்பு எப்போது...? - லோகேஷ் கொடுத்த அப்டேட் ; மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!
விஜய் - லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது 'வாரிசு' படம், இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ராஷ்மிகா ஜோடி சேர்ந்து நடிக்க உடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், குஷ்பூ, ஷாம், ஜெயசுதா மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது, அதேபோல வாரிசு படமும் நல்ல வசூல் மழையை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வாரிசு' திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 'வாரிசு' வெளியீடுகள் குறித்த அப்டேட் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | வாரிசு படம் செய்த சாதனை! தமிழ்நாட்டில் இத்தனை கோடிக்கு விற்பனை?
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியிடம் பேசுகையில், வரும் டிசம்பர் மாதம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். தொலைப்பேசி வாயிலாக தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் இந்த பதிலை அளித்துள்ளார்.
இதனால், தீபாவளிக்கு விஜய்யின் படமும் வெளியாகவில்லை, பாடம் இல்லை என மனக்குமுறலில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, லோகேஷின் இந்த அறிவிப்பு உண்மையாகவே பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, லோகேஷ் - விஜய் கூட்டணி வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ஏகோபித்த வெற்றியை பெற்ற நிலையில், இந்த கூட்டணியின் இரண்டாம் படம் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. லோகேஷின் 'கைதி' - 'விக்ரம்' பட உலகை (LCU - Lokesh Cinematic Universe) அடிப்படையாக வைத்து, தளபதி 67 உருவாகிறதா அல்லது அவற்றுக்கு தொடர்பற்ற வேறு கதைக்களத்தில் வருகிறதா என்பதுதான் டிசம்பரில் நமக்காக காத்திருக்கும் அப்டேட் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரம் : வெளியானது விசாரணை அறிக்கை... பரபரப்பு தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ