ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாரிக்கு நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து அவள் உயிர் பிழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  ஆபரேஷன் முடிந்து மாரி கண் விழித்து சூர்யாவிடம் பேசிக் கொண்டிருக்க மறுப்பக்கம் தாராவின் டீம் அப்செட்டில் உட்கார்ந்து இருக்க அங்கு தோன்றும் தேவி தாராவின் கழுத்தை நெறித்து பயம் காட்டுகிறார். கிருஷ்ணன் கம்சனை வதம் செய்த மாதிரி நான் சூர்யா மாரிக்கு குழந்தையா பிறந்து தினம் தினம் உனக்கு பயத்தை காட்டி கொள்ளுவேன் என சபதம் எடுக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | லோகேஷ் - ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது? ஹாட் அப்டேட்


அடுத்ததாக சூர்யா உட்பட எல்லோரும் சித்தரை சென்று சந்திக்க இதில் என்னுடைய வேலை எதுவும் கிடையாது, மாரி உயிர் பிழைக்க முழுக்க முழுக்க காரணம் சூர்யா தான் என சொல்கிறார். மேலும் இனிமே அவங்க வாழ்க்கையில எல்லாமே நல்லதாக நடக்கும். தேவி அவங்களுக்கு குழந்தையா வந்து பிறப்பா என்று சொல்ல எல்லோரும் சந்தோஷம் அடைகின்றனர். அடுத்து ஹாஸ்பிடலுக்கு வந்த சூர்யா முருகனிடம் மாரிக்கு விதவிதமாக ஜூஸ் வாங்கிட்டு வர சொல்ல வாங்கி வந்து கொடுத்த முருகன் பேஷண்ட்க்கு வாங்கிட்டு போறியா கடை வைக்க வாங்கிட்டு போறியான்னு கேள்வி கேக்குறாங்க என்று நக்கல் அடிக்கிறான். பிறகு மாரி வீட்டுக்கு போகலாம் என்று சொன்னதும் எல்லோரும் கிளம்பி செல்கின்றனர்.


வீட்டுக்கு வந்ததும் மாரிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிச் செல்ல வேண்டும் என்று ஹாசினி உள்ளிட்டவர்கள் சொல்ல சூர்யா மாரிக்கு நானே ஆரத்தி எடுக்கிறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் நிலவரம்: உலகளவில் இத்தனை கோடி கலெக்ஷனா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ