கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான ஆக்ஷன் கலந்த க்ரைம் திரைப்படம் 'மாஃபியா'. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர், தலைவாசல் விஜய், ரேகா சுரேஷ், மேத்யூ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். போதைப்பொருள் விற்கும் குமபலை பிடிக்க அதிகாரி மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளும், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளையும் இப்படம் சுவாரஸ்யமாக கூறியிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த படத்தின் இறுதியில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்னும் விதமாக படம் முடிந்தது. அதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் அருண் விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் லேட்டஸ்டாக இப்படம் குறித்த தகவல் ஒன்றை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு கெத்தாக நிற்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் கேப்ஷனாக எனக்கு பிடித்தமான போட்டோஷூட் இது, இது மாஃபியாவிற்காக எடுக்கப்பட்டது என்றும், இந்த புகைப்படத்தை எடுத்தவர் பிரபல போட்டோகிராபர் வெங்கட்ராம் என்றும் பதிவிட்டு இருந்தார்.



மேலும் இயக்குனர் கார்த்திக் நரேனையும் டேக் செய்து மாஃபியா படம் குறித்து கேள்வி எழுப்பும் விதமாகவும் பதிவிட்டு இருந்தார். இவரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் கார்த்திக் நரேனும் 'விரைவில் ப்ரோ' என்று பதிலளித்து இருந்தார். கூடிய விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, (https://www.facebook.com/ZeeTamilNews/) ட்விட்டரில் @ZeeTamilNews (https://twitter.com/ZeeTamilNews) மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews (https://t.me/ZeeTamilNew) என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR