கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள பெப்ஸி (FEFSI) தொழிலாளர்களின் நலனுக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்துள்ளார். விஜய்சேதுபதியின் இந்த செயலைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த அனைவரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஒரு கோடிக்கான காசோலையை நடிகர் விஜய்சேதுபதி பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (Film Employees Federation of South India) சார்பில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு ஒரு கோடி நிதியுதவி வழங்கியதை அடுத்து, அவருக்கு பெப்சி தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


இந்தசம்வம் குறித்து பேசிய நடிகர் விஜய்சேதுபதி (Vijay Sethupathi), "நிதியுதவி செய்ய வேண்டும் என்று நினைத்து பலமுறை முடியாமல் போய்விட்டது. தற்போது காஸா கிராண்டே விளம்பரப் படத்தில் நடித்து அதில் வந்த வருவாய் ஒரு கோடி ரூபாயை பெப்சிக்கு கொடுத்தேன். 


ALSO READ | விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் இவங்களா


இந்த ஒரு கோடியோடு நிற்காமல் என்னால் என்ன முடியுமோ அதை தொடர்ந்து கொடுப்பேன். நானும் நடுத்தர குடுபத்தில் பிறந்தவன் தான். வீட்டின் வாடகை ஏறும்போதெல்லாம் பக் பக் என்று இருக்கும். 


இதை தடுக்க சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டு வாடகை மிகப்பெரிய பாரம். ஓனர் போடுற ரூல்ஸ் எல்லாம் பார்த்தா பாகிஸ்தானில் குடியிருப்பது போலவே இருக்கும் " எனக் கூறினார்.


நிதி உதவி செய்வது விஜய் சேதுபதிக்கு இது முதல் முறையல்ல, பலமுறை அவர் மற்றவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மகளுடன் நடிக்கமாட்டேன்! விஜய் சேதுபதி அதிரடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR