பாலிவுட்டின் பவர் ஜோடிகளில் ஒருவரான அர்ஜுன் கபூர் மற்றும் மலாய்கா அரோரா இருவருக்கும் இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சில ஊடக அறிக்கைகள் கூறியதை அடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிவினை பற்றிய இந்த அதிர்ச்சியூட்டும் வதந்திகள் அர்ஜுன்-மலாய்கா ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தன. சிலர் இந்த ஜோடியை ட்ரோல் செய்தாலும், மற்றவர்கள் இந்த செய்தி இதயத்தை உடைக்கும் செய்தியாக உள்ளதாக பதிவிட்டுள்ளனர்.






இருப்பினும், அர்ஜுன் கபூரோ அல்லது மலைகா அரோராவோ தங்கள் உறவின் தற்போதைய நிலை குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.


அர்ஜுன் சமீபத்தில் உறவினர் ரியாவின் வீட்டிற்குச் சென்றதாகவும், அருகிலேயே இருக்கும் தனது காதலி மலாய்காவைச் சந்திக்கவில்லை என்றும் பல ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து வதந்திகள் இன்னும் வலிப்பெற்றன. 


எனினும், இந்த எந்த வதந்திகளுக்கும் சம்பந்தப்பட்ட யாரும் இன்னும் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. 


சமீபத்தில், மலைகாவும் அர்ஜூனும் புத்தாண்டை ஒன்றாக கொண்டாடிவிட்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மலைக்கா அரோரா 'திவா யோகா மையம்' என்ற பெயரில் யோகா ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். மேலும் உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா செய்யுமாறும் ஜிம்மிற்கு செல்லுமாறும் மக்களை அடிக்கடி வலியுறுத்துகிறார்.


அர்ஜுன் தற்போது 'ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்', 'குட்டே' மற்றும் 'தி லேடி கில்லர்' ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.


ALSO READ | சித்தார்த் சர்ச்சை ட்வீட்; காவல்துறை விசாரணையை தொடங்கம்


ALSO READ | 'மாறன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR