மாநாடு திரைப்படத்துக்கு நார்வேயில் கிடைத்த 4 விருதுகள்..!
அண்மையில் தியேட்டரில் ரிலீஸாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த மாநாடு திரைப்படத்துக்கு நார்வே தமிழ் திரைப்பட விருது விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளது.
நடிகர் சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் மாநாடு திரைப்படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்தை தயாரிப்பதற்கும், அதனை வெளியிடுவதற்கும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. படம் தொடங்கியது முதலே நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்.
ALSO READ | மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கப்போகும் எஸ்.ஜே.சூர்யா!
கடைசியாக வெளியிடும் நாளன்று கூட திடீரென நிதிப் பிரச்சனையால் படம் வெளியாகாமல், பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகே காலை 8 மணிக்குமேல் ரிலீஸானது. லூப் கான்செப்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. சிறந்த திரைக்கதையைக் கொண்டிருக்கும் மாநாடு திரைப்படத்தை, சினிமா துறையினருக்கான படிப்பில் கூட சேர்க்கலாம் என இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு சிக்கலான கதைக்களத்தை ரசிகர்களுக்கு புரியும் வகையில் திரைவடிவம் கொடுத்த வெங்கட் பிரபுவுக்கும் சூப்பர் ஸ்டார் முதல் பல்வேறு உட்ச நட்சத்திரங்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த திரைப்படத்துக்கு நார்வே தமிழ் திரைப்பட (NFTT) விருது விழாவில் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த வில்லன், சிறந்த எடிட்டர் ஆகிய துறைகளில் வெங்கட்பிரபு, யுவன் சங்கர் ராஜா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரவீன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடித்த ஓய்.ஜி மகேந்திரனுக்கு கலைச்சிகரம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ALSO READ | ’மாநாடு வெற்றி, ஆனால் கலெக்ஷன்?..’ மௌனம் கலைத்த சுரேஷ்காமாட்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR