நேர்கொண்ட பார்வை, வலிமை படங்கள் சரியாக சோபிக்கவில்லை என்பதால் வினோத்தும், அஜித்தும் இணைந்திருக்கும் துணிவு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.வாரிசும் பொங்கலுக்கு வெளிவருவதால் இந்தப் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறது. அதேபோல் வெளிநாட்டு விநியோக உரிமையை அஜித்தின் அடுத்தப் படத்தை தயாரிக்கவிருக்கும் லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


இதற்கிடையே துணிவு படத்தின் இசையமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்திருக்கின்றன. அதுதொடர்பாக ஹெச்.வினோத்துடன் ஜிப்ரான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்தச் சூழலில் துணிவு படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகரக்ளிடையே ஆவல் எழுந்திருக்கிறது. ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடலை அனிருத் பாட வைசாக் எழுதியிருக்கிறார். சில்லா சில்லா என்ற அந்தப் பாடல் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



இந்நிலையில் துணிவு படத்தின் புதிய அப்டேட் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதன்படி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “துணிவு படத்தின் ஒரு இன்ட்ரெஸ்டிங் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் பாடல் பாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.


மேலும் படிக்க | என் அன்பு தம்பி உதயநிதி - கமல் பிறந்தநாள் வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ