அசுரன் படப்பிடிப்பு தொடக்கம்! வித்யாசமான கெட்டப்பில் தனுஷ்?
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள `அசுரன்` திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
மாரி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடிக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
மாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி அசுரன் படம் தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார். இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்த நிலையில், நேற்று அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், தனுஷ் கையில் ஈட்டி இருப்பது போன்று போஸ்டர் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில், தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் வயதான தோற்றத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றிலும் படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.