6ix Cinemas தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும், இப்படத்திற்கு வித்தியாசமாக  'வாட் தி ஃபிஷ்' 'WHAT THE FISH' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பெயரே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. உலகத்தரத்தில்  அமைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டர் படத்தின் மையத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தெரியாத பல அமானுஷ்யங்களை  மனோஜ்குமார் மஞ்சு எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. போஸ்டரில் இருக்கும் பல வகை சித்திரங்கள் நமக்குள் பெரும் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.  மனோஜின்  இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர்களுக்கு புதிய உலகைக் காட்டப்போகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்குகொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


அனைவரும் ரசிக்கும் வண்ணம் உலகின் பல மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஒரு அதிசய உலகத்தை உங்கள் கண்முன் காட்டும் திரை அனுபவமாக இப்படம் இருக்கும். “வாட் த ஃபிஷ்” திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் உலகளாவிய படமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உலகத்தரமான தொழில்நுட்பத்துடன் 6ix Cinemas தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. 


மேலும் படிக்க | இந்திய நடிகர்களிலேயே முதல் முறை! பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்!


மேலும் படிக்க | ஜெய்லரில் தமன்னாவை லாக் செய்த நெல்சன்; சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்பிரைஸ் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ