மீண்டும் ஒரு முறை உங்களுக்காக ‘மறு வார்த்தை’ பாடல்....
விரைவில் வெளியாகவுள்ள எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பாடலின் புரமோவினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
விரைவில் வெளியாகவுள்ள எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பாடலின் புரமோவினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக வெளியீட்டுக்கு காத்திருந்த திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இத்திரைப்படத்தை வெளியிட பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷன் தன் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் வெளியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் படுவேகமாக நடைப்பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், அஸ்வின் குமார், செந்தில் வீராசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து உள்ளார் .
முன்னதாக கடந்த 2016 மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கிய நிலையில்., தயாரிப்பு ரீதியில் பிரச்சினை ஏற்பட இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்க சென்று விட்டார். இதன் காரணமாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் அரையும் குறையுமாகவே முடிந்திருந்தது. இயக்குனர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தையும் முழுவதுமாக முடிக்க முடியாமல் திணறினார். இதே நேரத்தில் கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' படத்தையும் தயாரித்து வந்தார் கௌதம் மேனன். பல பிரச்சனைகளில் இருந்த கௌதம் மேனனால் நரகாசூரன் படத்தை கவனிக்க முடியவில்லை .
இதற்கிடையில் கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட, தனக்கு கிடைத்த இடைவெளியில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்போதும் படத்தை அவரால் வெளியிட முடியவில்லை .
இந்நிலையில் ஐசரி கணேஷனின் தங்கை மகன் 'வருண்' நடித்துள்ள 'ஜோஸுவா' படத்தை இயக்கும் போது ,ஐசரி கணேஷனிடம் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை நீங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கௌதம் மேனன் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இம்மாதம் 29-ஆம் தேதி ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பாடலின் புரமோ-வினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.