பாகுபலி-2, அவேன்ஜர்ஸ் நாயகர்கள் ஒன்றினைந்தால் எப்படி இருக்கும்?... என்படை உருவாக்கி காட்டி விட்டார்கள் சீன ரசிகர்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பாகுபலி-2 மற்றும் அவேன்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படங்கள் சீனாவில் ஒரே கால நேரத்தில் வெளியானது. இதன் விளைவாக அந்நாட்டில் பிரபலமாக பயன்படுத்தப்படும் செய்தி செயலியான WeChat-ல் இவ்விரண்டு படங்களையும் இணைத்து புதியதோர் உலகை படைத்து விட்டனர்.



மகிழ்மதி என்னும் ராஜ்ஜியத்தின் கதையாக பாகுபலி திரைப்படம் உருவாகி வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தில் குறிப்பிடப்பட மகிழ்மதி என்னும் சாம்ராஜ்ஜியம் கற்பனையான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த சாம்ராஜ்ஜியத்தினை அவேன்ஜர்ஸ் குடும்பத்துடன் இணைத்து மாஸிமதி என்னும் புதியதொரு ராஜ்ஜியத்தினையே சீன ரசிகர்கள் உருவாக்கிவிட்டனர்.


இந்த புதிய ராஜ்ஜியத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


முன்னதாக கடந்த வாரம் பாக்ஸ் ஆப்பிஸ் தகவலின்படி அவேன்ஜர்ஸ் இன்பினட்டி வார் திரைப்படம் சுமார் 1 பில்லியன் டாலர்களை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.